வேளாண்மைத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைகள் தொடரட்டும்: உதயநிதி பாராட்டு!

உழவர் பெருமக்கள் மகிழும் வகையில் சுமார் ரூ.45,661 கோடி அளவுக்கு நம் திராவிட மாடல் அரசின் வேளாண்மை பட்ஜெட் அமைந்துள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டு வேளாண் பெருங்குடி மக்களையும் – வேளாண்மையையும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, வேளாண் நிதிநிலை அறிக்கை 2025- 2026 சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

கிராமப்புற வேளாண் பட்டதாரி இளைஞர்களை கொண்ட முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள், நெல் சாகுபடி பரப்பளவை உயர்த்த சிறப்புத் திட்டம், மழைவாழ் உழவர்கள் முன்னேற்றம், உழவர் சந்தைகளில் இருந்து ஆன்லைன் முறையில் பொருட்களை டெலிவரி செய்யவும் தனித்திட்டம், உழவரைத் தேடி வேளாண்மைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கூட்டுறவு பயிர்க்கடன் – குறுகிய காலக்கடன் வழங்க என ரூ.20,500 கோடி இலக்கு, வேளாண் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி.. இப்படி உழவர் பெருமக்கள் மகிழும் வகையில் சுமார் ரூ.45,661 கோடி அளவுக்கு நம் திராவிட மாடல் அரசின் வேளாண்மை பட்ஜெட் அமைந்துள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். உழவர் வாழ்வு செழிக்கட்டும்! வேளாண்மைத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைகள் தொடரட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.