நாள்தோறும் பல கொலைகள் நடப்பதை பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழகம் மாறி இருப்பதைக் காட்டுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. நாள்தோறும் பல கொலைகள் நடப்பதை பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழகம் மாறி இருப்பதைக் காட்டுகிறது. இந்த நிலைமை நீடித்தால் வன்முறையில் முதன்மை மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகத்துக்கு திமுக அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
தமிழகத்தை அமளிக்காடாக மாற்றியிருக்கும் திமுக அரசின் செயல்பாடுகள் கண்டனத்துக் குரியவை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் வன்முறையிலிருந்து காப்பாற்றவும், தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.