நம்மளுக்கு உயிர் இருக்கிறது. உணர்வு இருக்கிறது. உரிமை இருக்கிறது என்பதற்காக நம்மளை வைத்திருக்கவில்லை. நம்மிடம் ஓட்டு இருக்கிறது என்பதற்காக தான் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசவையில், தமிழ் மொழி குறித்து, தமிழர் நலன் குறித்து பேச முடியாத சூழல் இருந்தால் அதற்கு எதற்கு இந்த அரசு என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தமிழர்கள் நலன் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்தும், நீங்க அதிகப்பிரசங்கி தனமாக பேசுகிறீர்கள்.. நீ, வா, போ என்று அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியது குறித்தும் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-
பெயர் தான் தமிழ்நாடு. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இந்த அரசு, இந்த அவை, தமிழுக்கும், தமிழர்களுக்குமான அவை இல்லை. அதற்கான இடம் இது இல்லை என்று இதை கேட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு தெரியும். இது நமக்கான நாடு இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெயர் தான் தமிழ்நாடு. தமிழுக்கும், தமிழர்களுக்கும் இது சுடுகாடு. நம்மளுக்கு உயிர் இருக்கிறது. உணர்வு இருக்கிறது. உரிமை இருக்கிறது என்பதற்காக நம்மளை வைத்திருக்கவில்லை. நம்மிடம் ஓட்டு இருக்கிறது என்பதற்காக தான் வைத்திருக்கிறார்கள். அதையும் காசு கொடுத்து வாங்கிட முடியும் என்பதால் அதை பற்றி கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டில் அரசவையில், தமிழ் மொழியை குறித்து, தமிழர் நலன் குறித்து, மொழி மீட்சி குறித்து, அதன் பாதுகாப்பு பற்றி குறித்து பேச முடியாத சூழல் இருந்தால் அதற்கு எதற்கு இந்த அரசு.. அதுவும் தமிழ்நாடு அரசு சட்டசபை என்று ஏன் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.