இஎஸ்ஐ மருத்​து​வ​மனை​ மருத்​து​வர் மீதான தாக்​குதலுக்கு கண்​டனம்!

இஎஸ்ஐ மருத்​து​வ​மனை​யில் பணிபுரி​யும் பயிற்சி மருத்​து​வர் மீதான தாக்​குதலுக்​கு, மருத்​துவ அலு​வலர் சங்கம் கண்டனம் தெரி​வித்​துள்​ளது.

சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் விடுதி செயல்படுகிறது. விடு​தி​யில் தங்​கி​யுள்ள பயிற்சி மருத்​து​வர் ஒரு​வர் ஆன்​லைனில் ஆர்​டர் செய்த உணவை வாங்​கு​வதற்​காக இரவு 10 மணிக்கு மேல் வெளியே வந்​துள்​ளார். அப்​போது அவருக்​கும், அங்​குள்ள காவலாளி மற்​றும் ஒப்​பந்த ஊழியருக்​குமிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதில் பணியாளர்கள் தாக்​கிய​தில் பலத்த காயமடைந்த பயிற்சி மருத்​து​வர், மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இதற்கு கண்டனம் தெரி​வித்து தமிழ்​நாடு மருத்​துவ அலு​வலர்​கள் சங்​க பொதுச் செய​லா​ளர் மு.அகிலன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்​ப​தாவது:-

பயிற்சி மருத்​து​வரை, மருத்​து​வக் கல்​லூரி முதல்​வரின் உதவி​யாள​ரும், தனி​யார் செக்​யூரிட்டி ஆட்​களும் எலும்பு முறிவு ஏற்​படும் அளவுக்கு கடுமை​யாகத் தாக்​கி​யுள்​ளது அதிர்ச்​சிகர​மானது. மத்​திய அரசின் கட்​டுப்​பாட்​டில் இயங்​கும் இக்​கல்​லூரி​யில் பயிற்சி மருத்​து​வரை கண்​ணி​யக்​குறைவுடன் நடத்​தி, கொடும் தாக்​குதலுக்கு உள்​ளாக்​கிய கல்​லூரி முதல்​வர் மற்​றும் விடு​திக் காப்​பாள​ருக்கு தமிழ்​நாடு மருத்​துவ அலு​வலர்​கள் சங்​கம் கடும் கண்​டனங்​களை தெரி​வித்​துக் கொள்​கிறது. மருத்​து​வர் மீது தாக்​குதல் நடத்​திய பணி​யாளர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு, தமிழக அரசுக்கு தமிழ்​நாடு மருத்​துவ அலு​வலர்​கள் சங்​கம் கோரிக்கை விடுக்​கிறது. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் எஸ்.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘பயிற்சி மருத்​து​வரை தாக்​கிய சம்​பவத்தை வன்​மை​யாக கண்​டிக்​கிறோம். தாக்​கிய​வர் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும். உடனடி​யாக அவரை பணி நீக்​கம் செய்ய வேண்​டும். கடுமை​யான போட்​டியை எதிர்​கொண்டு மருத்​து​வப் படிப்​பில் நுழைந்​துள்ளனர். அதைப்​போல எத்​தனையோ கனவு​களு​டன் பெற்​றோர் தங்​கள் குழந்​தைகளை வளர்த்​து, படிக்க வைத்​துள்ள நிலை​யில், தங்​கள் மகன் மீது தாக்​குதல் தொடுத்​தது எந்த அளவு அவர்​களை காயப்​படுத்தி இருக்​கும். அங்கு படிக்​கும் மற்ற மாணவர்​கள் மற்​றும் பெற்​றோருக்​கும் இது பீதியை ஏற்​படுத்தி உள்​ளது. எனவே, எதிர்​காலத்​தில் இது​போன்ற சம்​பவம் நடை​பெறாத வண்​ணம் இதற்கு நிர்​வாகம் முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டு​கிறோம்’ என தெரி​வித்​துள்​ளார்​.