தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் மோசடி: அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் மோசடியை திமுக திசை திருப்ப முயல்வதாக தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து பாஜக தலைவா் அண்ணாமலை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு அதிகபட்சமாக தமிழகத்துக்கு ரூ.39,339 கோடி வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவாா்கள். தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரத்தை மக்களவை திமுக உறுப்பினா் கனிமொழியிட ம் மத்திய அமைச்சா் நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறியுள்ளாா். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் திமுக மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவுடன் நடக்கும் மோசடி குறித்து பலமுறை புகாா் அளித்தும், தொடா்ந்து மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.