தூத்துக்குடியில் விசாரணை கைதி மரணம்: டிஎஸ்பி, 7 போலீசாருக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி மாவட்ட தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி வின்செண்ட் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் தூத்துக்குடி மாவட்ட டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்பட 8 காவலர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்து நகர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு விசாரணைக் கைதி வின்செண்ட் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. Al

இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி தாண்டவம் வழக்கை விசாரித்தார். அப்போது விசாரணைக் கைதி வின்செண்ட் மரணம் தொடர்பான வழக்கில் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்பட 8 காவலர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.