தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உறுதி செய்வோம் என்று மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபட்டு, வலுவாக பாடுவோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி. எங்கள் மற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம், மாநிலத்திற்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வோம். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உறுதி செய்வோம்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், ஊழல் மற்றும் பிளவுபடுத்தும் தி.மு.க.வை விரைவில் வேரோடு பிடுங்குவது முக்கியம், அதை எங்கள் கூட்டணி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.