தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கிளை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள 68,500 வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி கிளை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 3 பெண்கள் உள்பட 9 பேர் இடம் பெறுவார்கள். தற்போது தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி உருவாகிவிட்டது. இந்த கூட்டணி தமிழக உரிமையை நிலைநாட்டும் கூட்டணியாகும்.
திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் சபை நாகரிகம் இல்லாமல் பேசுகிறார்கள். பெண்களை அதிமுக தெய்வமாக வணங்கும். ஆனால் பெண்களை திமுக இழிவாக பேசி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்களின் ஒருவாக்குகள் கூட திமுகவுக்கு போட மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.