நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சாம் பித்ரோடா, சுமன் துபே உள்ளிட்டோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது. குற்றப்பத்திரி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக வழக்கு ஏப். 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.