ஏப். 17-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஏப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏப். 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது. தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள தொழில்கள், விரிவாக்கப்படவுள்ள தொழிற்சாலைப் பணிகளுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். சில முக்கிய துறைகளில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பாா்க்கப்படுகிறது.