சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இங்கு இளநிலை,முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளன. இது தமிழக அரசின் பல்கலைக்கழகமாகும். இதன் கீழ் ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அவர் யார் என போலீஸார் தேடி வருகிறார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அங்கு சோதனையிட்டதில் அது புரளி என தெரியவந்தது.

அண்மைக்காலமாக விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், தமிழக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் என தொடர்ந்து அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன.