துணைவேந்தர் நியமனம் தொடர்பான தீர்ப்புக்காக மே 3-ல் முதல்வருக்கு பாராட்டு விழா!

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மே 3-ம் தேதி முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தபோவதாக உயர்​கல்வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் உயர்​கல்​வித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்வி​களுக்கு பதிலளித்து அமைச்​சர் கோவி.செழியன் பேசி​ய​தாவது:-

பல்​கலைக்​கழக துணைவேந்​தர் நியமனத்தை மாநில அரசே மேற்​கொள்​ளும் மகத்​தான அறி​விப்பை உச்ச நீதி​மன்​றம் சென்று பெற்​று​வந்த முதல்​வருக்கு மே 3-ம் தேதி சென்​னை​யில் பாராட்டு விழா நடத்​தப்​படும்.

கடந்த 10 ஆண்​டு​கால அதி​முக ஆட்​சி​யில் இந்த துறைக்கு சுமார் ரூ.37 ஆயிரம் கோடி நிதி​தான் ஒதுக்​கப்​பட்​டது. ஆனால், திமுக ஆட்​சி​யில் இந்த 5 ஆண்​டு​காலத்​தில் மட்​டும் ரூ.35 ஆயிரம் கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது. மேலும், அதி​முக ஆட்​சி​யில் 40 கல்​லூரி​கள் புதி​தாக ஏற்​படுத்​தப்​பட்​டன. தற்​போதைய ஆட்​சி​யில் தமிழகம் முழுவதும் 37 கல்​லூரி​கள் தோற்​று​விக்​கப்​பட்​டுள்​ளன.

தமிழ் மொழி சிறப்பை இளம் தலை​முறை​யினரிடம் கொண்டு சேர்ப்​ப​தற்​காக கல்​லூரி​களில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்​சிகள் ரூ.3 கோடி​யில் நடத்​தப்​படும். அரசுக் கல்​லூரி​களில் கலைத் திரு​விழா ரூ.5 கோடி​யில் ஆண்​டு​தோறும் நடத்​தப்​படும். மேலும் அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களுக்கு தேவைப்​படும் புதிய பாடப்​பிரிவு​களை பரிந்​துரை செய்ய பாடப்​பிரிவு பரிசீலனைக் குழு அமைக்​கப்​படும்.

இதுத​விர அரசுக் கல்​லூரி மாணவர்​கள் வெளி​நாடு​களில் உள்ள பல்​கலைக்​கழகங்​களில் ஒரு செமஸ்​டர் கல்வி பயில்​வதற்கு அழைத்​துச் செல்​லப்​படு​வர். அரசுக் கல்​லூரி​களில் முன்​னாள் மாணவர் சங்​கம் ஏற்​படுத்​தப்​படும். மாநில உயர்​கல்வி நிறு​வனங்​களுக்​கான பிரத்​யேக தரவரிசைப் பட்​டியல் தமிழ்​நாடு உயர்​கல்வி மன்​றத்​தால் வெளி​யிடப்​படும்.

சென்னை தரமணி மைய தொழில்​நுட்ப வளாகம் நவீன வசதி​களு​டன் ரூ.100 கோடி​யில் மேம்​படுத்​தப்​படும். மேலும், அரசுக் கல்​லூரி ஆசிரியர்​களுக்கு முறை​யான பயிற்சி வழங்​கப்​படும். இதற்​காக கல்​லூரி ஆசிரியர் மாநில பயிற்சி மையம் அமைக்​கப்படும். இதுத​விர அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் வேலை​வாய்ப்பு வழி​காட்டி மற்​றும் பயிற்சி மையம் மேம்​படுத்​தப்​படும்.

தொழில் நிறு​வனங்​களில் பணிபுரி​யும் பணி​யாளர்​களுக்​காக பொறி​யியல், பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் பட்​டப்​படிப்பு மற்​றும் பட்​டயப்​படிப்பு தொடங்க அனு​மதி அளிக்​கப்​படும். அரசுக் கல்​லூரி மாணவர்​களுக்கு பாலின உளவியல் குறித்த கண்​காணிப்பு மற்​றும் விழிப்​புணர்​வுக் குழு அமைக்​கப்​படும். அரசுக் கல்​லூரி​களில் நிறுவன மேலாண்​மைக் குழு அமைக்​கப்​படும். இவ்​வாறு அவர் அறி​விப்​பு​களை வெளி​யிட்​டார்​.