எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சர். பிட்டி தியாகராயரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-
பிட்டி தியாகராயர் பிறந்தநாள்:
கல்விக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் இணைப்பு, மதிய உணவுத் திட்டம் எனச் சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்.
நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்த மாண்பாளராக உயர்ந்தவர்.
எவருக்காகவும் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாத ‘வெள்ளுடை வேந்தர்’ எனப் பெயரும் பெற்றவர்.
இன்றைய நம் திராவிடமாடல் ஆட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே வலுவான கொள்கை அடித்தளம் அமைத்த எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.