மத்திய அரசு நாடு முழுக்க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒப்புதல் அளிதுள்ளது. எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்க 2 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பைப் பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன. அதேநேரம், இதில் பல முக்கிய விவாகங்களுக்கு பதில் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதற்கிடையே மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முக்கிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பை எப்போது தொடங்குவீர்கள்? எப்போது முடிப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேநேரம் சாதி வாரிக் கணக்கெடுப்பில் மத்திய அரசின் அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கும் திமுகவுக்கும் கிடைத்த வெற்றி என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.