தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் வரவேண்டும்: கார்த்தி சிதம்பரம்!

தமி​ழ​கத்​தில் அரசி​யல் கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கும் கட்​சி​யாக காங்​கிரஸ் வளர​வேண்​டும், வரவேண்​டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்​றுக்கு அளித்த பேட்டி ஒன்​றில் காங்​கிரஸ் எம்​பி கார்த்தி சிதம்​பரம் கூறியுள்ளதாவது:-

தமிழக காங்​கிரஸுக்கு எதிர்​காலம் என்​பது பெரும் சவாலானது. தமிழக அரசி​யலில் கட்​சிகள் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது. இரு திரா​விட கட்​சிகளும் பலமாக உள்​ளது. திமுக, தொண்​டர்​கள் ரீதி​யாக அடிப்​படை கட்​டமைப்பை பலமாக வைத்​துள்​ளது. அடுத்​தடுத்த தலை​முறைக்​கான இளம் தலை​வர்​களை அக்​கட்சி அறி​முகம் செய்து வரு​கிறது. அதை சீனியர்​களும் ஏற்​றுக் கொள்​கி​றார்​கள். இன்​னும் 25 ஆண்​டு​களுக்கு தேர்​தல் ரீதியி​லான பிரச்​சினை​களை எதிர்க்​கொண்டு திமுக நீடித்து நிற்​கும். அதே​போல் அதி​முக-வை​யும் குறைத்து மதிப்​பிட முடி​யாது. இந்​தக் கட்​சிக்​கும் கிராம அளவில் வலு​வான கட்​டமைப்பு இருக்​கிறது. அதனாலேயே அந்​தக் கட்​சி​யுடன் சேர்ந்து தமி​ழ​கத்​தில் காலூன்ற நினைக்​கிறது பாஜக.

இரு திரா​விட கட்​சிகளும் வேண்​டாம் என்ற தாக்​கம் இருந்​தா​லும் மக்​கள் எப்​போது முடி​வெடுக்​கப் போகி​றார்​களோ அப்​போது​தான் அது நிறை​வேறும். அண்​ணா​மலை வரு​கைக்கு பின் தமி​ழ​கத்​தில் பாஜக சற்று வளர்ந்​திருப்​ப​தாகவே பார்க்​கப்​படு​கிறது. ஆனால், மக்​களவை தேர்​தல் வரும்​போது, மட்​டுமே பேசும் கட்​சி​யாக காங்​கிரஸ் உள்​ளது. திமுக, அதி​முக, தவெக போன்ற கட்​சிகளில் ஒரு​வரை முதல்​வர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தும் போது காங்​கிரஸில் மட்​டும் அப்​படியொரு நிலை இல்​லையே என, மக்​கள் யோசிக்​கின்​ற​னர்.

கூட்​ட​ணி​யில் இருந்​தா​லும் மக்​கள் பிரச்​சினை​களைப் பற்றி பேசவேண்​டும். காங்​கிரஸ் அப்​படிப் பேசுவ​தில்லை என்ற குற்​றச்​சாட்டு உள்​ளது. தேசிய கட்​சி​யாக தனிப்​பட்ட கருத்​துகளை வெளிப்​படுத்​த வேண்​டும். நடை, உடை, பாவனையை மாற்றி தமி​ழ​கத்​தில் அரசி​யல் கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கும் கட்​சி​யாக காங்​கிரஸ் வளர​வேண்​டும்; வரவேண்​டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.