ஐயூஎம்எல் தலைவராக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஐயூஎம்எல் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில், “இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு எனது வாழ்த்துகள்!

பண்பும் அரசியல் முதிர்ச்சியும் மதிக்கூர்மையும் பெற்ற பேராசிரியர் தலைமையில், இந்தியாவின் மதச்சார்பின்மையையும் மதநல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-இன் சீரிய மக்கள் பணி சிறக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.