போருக்கு ஆதரவாக முதன்முதலில் பேரணியை நடத்தியவர் ஸ்டாலின் தான்: சீமான்!

இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதன் முதலில் பேரணி நடத்தியது முதல்வர் ஸ்டாலின் தான். அரசியல் லாபத்திற்காக பாஜக திமுகவுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சி.பா. ஆதித்தனார் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:-

பிரதமரை சந்திக்க தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தன. எண்ணற்ற சிக்கல்கள் நமக்கு வந்தபோது அவற்றை பிரதமரிடம் பேசி சரி செய்திருக்கலாம். 3 நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்த முதலமைச்சர், இந்த முறை மட்டும் அந்த கூட்டத்தில் பங்கேற்றது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப் போய் மோடியை சந்திக்கிறீர்கள். அரசியல் லாபத்திற்காக பாஜக திமுகவுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறது. இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதன் முதலில் பேரணி நடத்தியது முதல்வர் ஸ்டாலின் தான். பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களோ, பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட பேரணி நடத்தவில்லை. இந்தியாவின் பதில் தாக்குதலை ஆதரித்து சென்னையில் திமுக நடத்திய பேரணியில் அரசியல் உள்ளது. தமிழக முதலமைச்சர் மட்டும் பேரணி நடத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது? போருக்கு ஆதரவாக பேரணியை நடத்திய முதலாவது நபர் ஸ்டாலின் தான்.

இந்தியா பாகிஸ்தான் போரில் என்ன நியாயம் இருக்கிறது? எத்தனை தீவிரவாதிகள் சுடப்பட்டனர்? இந்தியாவிற்குள் புகுந்து அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை என்ன செய்தீர்கள்? நமது நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு எப்படி தைரியம் வந்தது? சொந்த நாட்டு மக்களை தாக்குதல் நடத்தும் எண்ணம் வந்தாலே கொன்று விடுவார்கள் என்ற பயம் இருந்திருந்தால், அந்த சிந்தனை அங்கேயே செத்து இருக்கும். புல்வாமா தாக்குதல் ஒரு படிப்பினை இல்லையா? பகல்காம் சுற்றுலா தலத்தில் கூடுதல் பாதுகாப்பு இருந்து இருக்க வேண்டாமா? சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க முடியவில்லை. புல்வாமா தாக்குதலில் 42 ராணுவ வீரர்களை நம்மால் பாதுகாக்க முடியவில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார். ஆனால் இம்முறை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றிருக்கிறார். AD Also Read ED நடத்திய ரெய்டு.. டெல்லிக்கு ஓடி மோடியை பார்க்கிறார் மு.க.ஸ்டாலின்.. சீமான் சொன்ன கணக்கு! என்டிஏ கூட்டணி இத்தனை ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, இம்முறை மட்டும் பங்கேற்பதற்கான அவசியம் என்ன என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்கி இருக்க வேண்டும். திடீரென டெல்லி செல்லும் போது அமலாக்கத்துறை சோதனைக்காக செல்கிறீர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை என்டிஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு அல்லது நிதீஷ் குமார் விலகினால்.. திமுக இணக்கம் திமுக தன்னுடைய 22 உறுப்பினர்களை வைத்து ஆதரவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இணக்கமாக இருக்கலாம். திமுகவும் அந்த மாதிரியான சூழலில் ஆதரவு அளிப்போம் என்று இணக்கமாக இருக்கலாம்.

சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி எப்போதோ தேர்தல் பணிகளை தொடங்கி செய்து வருகிறது. கிட்டத்தட்ட 100 வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம். ஜூன் இறுதிக்குள் எல்லா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து அறிவித்து, அடுத்தக்கட்ட பணிகளை செய்வோம். நிச்சயமாக 234 தொகுதிகளில் 134 பேர் இளைஞர்களாகவே இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.