200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனி​சாமி!

தமிழகத்​தில் வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் 200 தொகு​தி​களில் வெற்​றி​பெறு​வோம் என திமுக தலை​வர் ஸ்டாலின் பகல் கனவு காண்​கிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி கூறி​னார்.

ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் எம்​எல்ஏ சு.ர​வி​யின் மகன் திருமண விழா தக்​கோலத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் எடப்பாடி பழனி​சாமி பேசி​ய​தாவது:-

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும். தமிழகத்தில் நல்லாட்சி நிலவ அதிமுக கூட்டணியை ஆதரியுங்கள்.

திமுக தலை​வர் ஸ்டா​லின் செல்​லும் இடங்​களில் எல்​லாம், வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் 200 இடங்​களில் திமுக கூட்​டணி வெற்​றி​பெறும் என்று கூறிவரு​கிறார். அவர் பகல் கனவு காண்​கிறார். மக்​கள் ஆதர​வுடன் வெற்றி பெற்​று, அதி​முக மீண்​டும் ஆட்சி அமைக்​கும்.

தமிழகத்​தில் கடந்த அதி​முக ஆட்​சி​யில் கொண்டு வந்த திட்​டங்​களை, திமுக அரசு முடக்கி உள்​ளது. திமுக அரசு இது​வரை எந்த திட்​டத்​தை​யும் புதி​தாக கொண்​டு​வர​வில்​லை. ஏற்​கெனவே அதி​முக அறி​வித்த திட்​டங்​களை ஸ்டிக்​கர் ஒட்டி செயல்​படுத்தி வரு​கிறது. தமிழகத்​தில் ஊழலும், முறை​கேடு​களும் அதி​கரித்​துள்​ளன. 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை மனதில் கொண்​டு, அதி​முக​வினர் சுறுசுறுப்​பாகச் செயல்பட வேண்​டும்.

2010 ஆம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை தடுத்து நிறுத்த அதிமுக அரசு நீதிமன்றம் மூலம் முயற்சித்தது. நீட் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இவ்​வாறு அவர் பேசி​னார்.