நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர் கருணாநிதி: மு.க. ஸ்டாலின்!

தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தந்தையர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்களது தந்தையின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கவுரவிக்கும் நாளாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தந்தையும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!” என்று பதிவிட்டுள்ளார்.