திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார்: வன்னியரசு!

திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திமுக கூட்​ட​ணி​யில் இருந்து சில கட்​சிகள் வெளி​யேறி​னாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்​ட​ணி​யில் இணைப்​ப​தற்​கான நடவடிக்​கையை தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மூலம் திமுக செய்து வரு​வ​தாக கூறப்​படு​கிறது. இதையொட்​டி, பாமக நிறு​வனர் ராம​தாஸை சந்​தித்த பிறகு , “2011-ம் ஆண்டு போல் விசிக​வும், பாமக​வும் ஒரே கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும்” என செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​திருந்​தார்.

செல்​வப்​பெருந்​தகை​யின் கருத்தை கடுமை​யாக விமர்​சித்து தனி​யார் தொலைக்​காட்சி விவாத நிகழ்ச்​சி​யில் விசிக துணை பொதுச் செய​லா​ளர் வன்​னியரசு பேசி​ய​தாவது:-

காங்​கிரஸ் கட்​சிக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்​கு​கின்​றனர். தமிழகத்​தில் காங்​கிரஸ் வலிமை​யாகவா இருக்​கிறது. எங்​களுக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்க வேண்​டும் என கூறுகிறோம். நான் கூட்​டணி கட்​சியை குறைத்து மதிப்​பிட​வில்​லை. அதே​நேரம், காங்​கிரஸின் வலிமை குறித்து தமிழகத்​தில் கருத்​துகணிப்பு நடத்​தி​னால் உண்மை தெரிய​வரும்.

தமிழகத்​தில் காங்​கிரஸுக்கு என்ன இருக்​கிறது? அகில இந்​திய அளவில் ராகுல்​காந்தி என்​னும் தலை​வர் சிறப்​பாக செயல்​படு​கிறார். அதன் தொடர்ச்​சி​யாகவே காங்​கிரஸை பார்க்க வேண்​டி​யிருக்​கிறது. விசிக​வுக்கு செல்​வப்​பெருந்​தகை தலை​வர் இல்​லை. இன்று அவர் ஒரு கட்​சி​யில் இருப்​பார், நாளை ஒரு கட்​சிக்கு செல்​வார். இது​தான் அவருடைய கடந்த கால வரலாறு. விசிக குறித்து பேச அவருக்கு தார்​மீக உரிமை இல்​லை. பாஜக, பாமகவோடு சேர மாட்​டோம் என விசிக தலை​வர் தெளி​வாக கூறிய நிலை​யில், பாமகவோடு சேருங்​கள் என சொல்​வது அவர் வேலை​யல்ல. பாஜக​வும், காங்​கிரஸும் சேர வேண்​டும் என நாங்​கள் சொன்​னால் அவர் ஏற்​றுக் கொள்​வா​ரா. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.