தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருகிறது. கொள்ளையடிக்கவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை சந்திப்போம் தமிழகத்தை காப்போம்” என்னும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மக்களை சந்தித்து பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருகிறது. திமுக கொள்ளையடிக்கவே ஆட்சிக்கு வந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவின் அனைத்தும் ஊழல்களும் மீதும் விசாரணை நடத்தி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்ததால் தான் 1,000 ரூபாய் உரிமை தொகையை திமுக கொடுத்தது.
தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிய திமுகவினர் தற்போது வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். குப்பைக்கு கூட வரி உயர்ந்தியுள்ளனர். பெரிய பெரிய தொழிற்சாலைகள் வெளி மாநிலத்திற்கு செல்வது பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை. கொள்ளையடிப்பதில் முதன்மை மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. தமிழக முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக இருந்து வருகிறார். டாஸ்மாக்கின் மூலமாக 45 கோடி லஞ்சப் பணம் மேலிடம் செல்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
