முதல்வரை சந்திப்பதற்கு காரணம் அரசியல் நாகரீகம் கருதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம். சாதாரண சந்திப்பு வேறு, அரசியல் வேறு என்று சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்தார்.
சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியார் கூட்டு அரங்கில் தேமுதிக வின் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், வருகின்ற தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றத்தை செய்ய உள்ளதாகவும், அதற்கு கேப்டன் அவர்கள் வழியில் இருக்கும் தொண்டர்களாகிய நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நிச்சயம் 2026 தேர்தலில் மிகப்பெரிய ஒரு வெற்றியை தேமுதிக பெறும் என்றும் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
அரசியலில் பெண் ஆளுமையாக ரோல் மாடலாக எடுத்துக் கொண்டது ஜெயலலிதாவே தான்.. மற்றவர்கள் வட மாநிலத்தவர்கள் நாம் வாழ்ந்த, சம காலத்தில் ஜெயலலிதா கட்சியையும் ஆட்சியும் கட்டுக்கோப்புடன் ஆளுமை மிக்க முதல்வராக ஆட்சி செய்தார். எனவே என் அரசியல் வாழ்க்கையில் ரோல்மாடல் ஜெயலலிதா அவர்கள் தான்.. திருமாவளவன் கூறும் கருத்திற்கு அவரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு பதில் என்னிடம் எதிர்பார்க்க கூடாது. அதற்கு நான் பதில் சொல்ல முடியாது.. அதேநேரம் ஆட்சியில் பங்கு என்பது தேமுதிக வரவேற்கிறது..
ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரு கட்சியிடம் இருக்கும் நிலையில் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எந்த முன்னேற்றமும் பார்க்கவில்லை. கூட்டணியில் இருப்பவர்களுக்கும் ஆட்சியை பகிர்ந்து அளிக்கும் போது யாரு தவறு செய்தாலும் கேட்கலாம்.. மக்களின் குறைகளை எடுத்துக்காட்டலாம். அனைவரும் இணைந்து பணியாற்றும்போது மிகப்பெரிய வெற்றியாக பலமாக தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கு அமையும். கூட்டணி ஆட்சி என்பதை தேமுதிக வரவேற்கிறது.
கேப்டன் விஜயகாந்த்,எம்ஜிஆரை மானசீக குருவாக சினிமாவிலும் அரசியலும் அறிவித்தார். அதுபோன்று விஜய்யும் விஜயகாந்தை மானசீக குருவாக அறிவிக்கட்டும்.. தமிழக வெற்றிக்கழக அரசியலில் வரலாற்றில் முன்னுதாரணமாக மானசிக குருவாக விஜயகாந்த்தை அறிவிக்கட்டும். பின்னர் புகைப்படத்தை போடலாமா வேண்டாமா என்று கேட்கட்டும்.. அப்படி செய்தால் தாராளமாக புகைப்படத்தை போட்டுக் கொள்ளலாம். தமிழக வெற்றிக்கழகம் விஜயகாந்த் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதை நாங்கள் மட்டுமல்ல. தேமுதிகவின் கடைகோடி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கூட்டணி என்று வரும்போது கேப்டன் விஜயகாந்தின் புகைப்படத்தை விஜய் பயன்படுத்தி கொள்ளட்டும். தனி கட்சியாக விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் மானசீக குருவாக அறிவித்தால் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
எல்லாம் கட்சிகளும் தேமுதிக அவர்களது கூட்டணிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். மாற்றுக் கருத்து இல்லை. மக்கள் மனதில் விஜயகாந்த் நிலைத்து நிற்கும் கட்சி தேமுதிக தான். இந்த நிமிடம் வரை யாரிடமும் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. முதல்வரை சந்திப்பதற்கு காரணம் அரசியல் நாகரீகம் கருதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம். சாதாரண சந்திப்பு வேறு, அரசியல் வேறு. உடல்நலம் பாதிக்கப்பட்டால், அவர்களை சந்தித்தால் கூட்டணி.. உணவகத்தில் சந்தித்தால் கூட்டணி.. புகைப்படம் வந்தால் கூட்டணி என்று கூறுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சென்று கட்சி வளர்ச்சி, ரத யாத்திரையும் வெற்றிகரமாக முடித்த பிறகு, மாநாட்டில் தெளிவாக அறிவிக்கப்படும்.. எதுவும் இப்பொழுது சொல்ல முடியாது உரிய நேரம் வரும்போது அறிவிக்கப்படும். கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லதுதான்.. கூட்டணிக்கு வரும்போது அதை தான் சொல்லுவோம். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
