முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவர், “விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ஒருமித்த குரலில் “நீல் ஆம்ஸ்ட்ராங்” எனப் பதிலளித்தனர். ஆனால், அதற்கு பதிலளித்த அனுராக் தாக்குர், “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்” எனத் தெரித்தார்.

அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்வினையை ஆற்றி வருகின்றனர். இதுகுறித்து நெல்லையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், அவ்வாறு பேசுவது அவரது இஷ்டம். அது குறித்து நான் கருத்து கூற முன்வரவில்லை.
ஆனால் நாங்கள் அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித் துறையை, தமிழக முதல்வர் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறது. அறிவைச் சார்ந்து இருக்கும் எங்கள் பாதையில் நாங்கள் செல்லும்போது எங்களோடு பயணிக்க விரும்புபவர்கள் வரலாம் என்றார்.

முன்னதாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அன்பில் மகேஸ் கூறிய​தாவது:-

அறி​வு​சார்ந்​து​தான் தமிழ் மொழியை திமுக உயர்த்தி பிடிக்க நினைக்​கிறது. ஆனால், பாஜக போன்ற அரசி​யல் கட்​சிகள் தமிழ் 2,000 ஆண்​டு​கள் பழமை​யானது. சமஸ்​கிருதம் போன்ற மொழிகள் பல்​லா​யிரம் ஆண்​டு​கள் பழமை​யானவை எனக்​கூறி நமது வரலாற்றை மறைக்​கப் பார்க்​கிறார்​கள்.

தமிழினம் 5,300 ஆண்​டு​களுக்கு முன்பே இரும்பை பயன்​படுத்​தி​யுள்​ளது. ஆனால் அதை மூடி மறைக்​கும் வேலையை மத்​திய அரசு செய்து வரு​கிறது. ஆனால், தமிழின் பெரு​மையை உலக அளவில் எடுத்து செல்​வதற்​கான முயற்​சி​யில் திமுக இறங்​கி​யுள்​ளது. அந்​த வகை​யில் அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் பன்​னாட்டு புத்தக கண்​காட்​சிக்கு 100 நாடு​களில் இருந்து புத்​தகம் மற்​றும் தமிழ்மொழி மீது ஆர்​வ​முள்​ளவர்​களை வரவழைக்க திட்​ட​மிட்​டுள்​ளோம்.

முதல்​வர் ஸ்டா​லினை நடிகர் விஜய் மரி​யாதை இல்​லாமல் பேசி​யது தவறு. கருணாநி​தி​யின் குடும்​பத்​துடன் விஜய் குடும்​பம் நெருக்​க​மான உறவு கொண்​ட​வர்​கள். உதயநி​தி​யின் நல்ல நண்​ப​னாக இருந்​தவர். ஆனால், தற்​போது ஒரு அரசி​யல் கட்சி தொடங்​கி​விட்டோம் என்​ப​தற்​காக அனைத்​தை​யும் மறந்​து​விட்டு பேசுவது சரியல்ல. அதே​போல், திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டுமென மத்​திய அமைச்​சர் அமித் ஷா கருத்து கூறி​யுள்​ளார். அமித் ஷாவுக்கு தமிழகத்​தின் அரசி​யல் பற்றி தெரிய​வில்​லை. 75 ஆண்​டு​கள் பழமை​யான கட்சி திமுக. 4 தலை​முறை​களை​யும் சேர்ந்த தொண்​டர்​கள் திமுக​வில் உள்​ளனர். அவர்​களுக்கு இருக்​கும் அரசி​யல் சிந்​தனை தெளி​வானவை. மேலும் திமுக கல்​வி, சமூகநீ​தி​யுடன் சேர்ந்து வளர்ந்த அரசி​யல்கட்​சி. அவ்​வளவு எளி​தில் அசைக்க முடி​யாது. இவ்வாறு அவர் கூறினார்.