பொத்துவில் ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் பேரணி தொடர்ச்சியாக முன்னெடுப்பு
இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான பேரணி நேற்று மாலை திருகோணமலையை சென்றடைந்தது.
இன்றைய தினம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்த குறித்த பேரணி திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது
குறித்த பேரணி திருகோணமலையிலிருந்து ஆரம்பமாகி நிலாவெளிஇகுச்சவெளிஇ புல்மோட்டை ஊடாக தென்னமரவாடியை சென்றடைந்து அங்கிருந்து வவுனியா ஊடாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
போரணியின் ஆரம்பத்தில் அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிரப்பட்டது.
குறித்த மக்கள் பேரணியில் மதகுருமார்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் முஸ்லீம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது.
ஐக்கியத்திற்கான யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு வீதியால் பயணித்தோருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கி வைத்தார்கள்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில்உத்தியோகபூர்வ அஞ்சலி
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை ஈகைச் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.
இன்று புதன் கிழமை(மே 18) காலை 7 மணிக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ஒன்று கூடிய பிரதேச சபை உறுப்பினர்கள் பணியாளர்கள் ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தனர்.
இவ் அஞ்சலியைத் தொடர்ந்து தவிசாளர் மற்றும் சபையின் உறுப்பினர்கள் செல்வதிசைநாயகம் தவநாயகம் ஆகியோர் அஞ்சலியுரையாற்றினர். இவ் அஞ்சலியுரைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமைகளுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச உள்ளுராட்சிக் கட்டமைப்பான பிரதேச சபை வருடாவருடம் உத்தியோகபூர்வமாக எந்த இடர்கள் ஏற்படுத்தப்படினும் நினைவேந்தும் உரிமையினை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு
பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின்போதுஇ 31 மேலதிக வாக்குகளால் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அஜித் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவுக்கு ஆதரவாக 78 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
23 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.