ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் வாரண்ட் இல்லாமல் சோதனை: எஸ்.பி. பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரீஸ் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறிய விவகாரம்: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இன்று பரபப்பான விசாரணை!

வழக்கறிஞர் வீட்டில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்ட ஆய்வாளர் சிவபாலனை காணொலி காட்சி மூலம் உடனடியாக ஆஜராக உயர்நீதி மன்ற நீதிபதி உத்தரவு!

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரான ஆய்வாளர் சிவபாலனிடம் நீதிபதி சரமாரி கேள்வி
“எந்த அடிப்படையில் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தினீர்கள்? அவ்வாறு சோதனை நடத்த மாஜிஸ்திரேட்டிடம் உரிய உத்தரவு பெற்றீர்களா?”என நீதிபதி காட்டம்!

“மாஜிஸ்திரேட் உத்தரவை பெறவில்லை. ஆனால் மாவட்ட எஸ்.பி உத்தரவின்பேரிலேயே ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தினேன்” என ஆய்வாளர் சிவபாலன் ஒப்புதல்.

சட்டப்படியான அனுமதி ஏதுமில்லாமல் வழக்கறிஞர் வீட்டில் போலீசார் சோதனை நடத்த உத்தரவிட்ட விவகாரத்தில் உடனடியாக மாவட்ட எஸ்.பி பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு!