கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது . 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஒரு மாதத்திற்குள் 33.20 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இநநிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பங்கேற்றனர்.
மேலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடுவதற்கு ஜனவரி 3 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. கோவின் இணையதளத்தில் ஆதார் ,பள்ளி அடையாள அட்டை, மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.