2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டப்பிரிவு நிர்வாகம்.
அதன்படி வரும் 10ம் தேதி முதல் 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பிரிவு அறிவித்துள்ளது.
அபராதம்
மேலும், ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடினால் ரயிலில் பயணம் செய்தால் ரூ.500 அபராதம் அபராதம் விதிக்கப்படும். UTS செயலி மூலம் ஜனவரி 31ம் தேதி வரை புறநகர் ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.