குடியரசுத் தினவிழாவில் தமிழக ஊர்தி பங்கேற்காது- மத்திய பாதுகாப்புத் துறை திட்டவட்டம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு.
தமிழக ஊர்தி பங்கேற்காதது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது – மத்திய அரசு.
தமிழக ஊர்தி இடம்பெறாதது குறித்த காரணங்களை மாநில அரசிடம் தெரிவித்துவிட்டோம் – மத்திய அரசு.
டெல்லி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது குறித்து மத்திய அரசு விளக்கம்: தமிழ்நாட்டை சேர்த்து மொத்தம் 29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தன. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி முதல் 3 சுற்று வரை தகுதி பெற்றது. முதல் 3 சுற்றுகளில் தமிழ்நாடு ஊர்திகள் பரிசீலிக்கப்பட்டது; விதிகளின் படி இறுதியில் இடம் பெறவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம்.