விமர்சனம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/movies/reviews/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Thu, 30 Dec 2021 23:46:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 விமர்சனம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/movies/reviews/ 32 32 201197430 ’மின்னல் முரளி’ திரை விமர்சனம் https://koodal.com/movies/reviews/2021/12/28/minnal-murali/ Tue, 28 Dec 2021 19:21:21 +0000 https://koodal.com/?p=105 சூப்பர் ஹீரோ சினிமா ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க வந்துள்ள படம் ‘மின்னல் முரளி’. நடிப்பு – டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், பெமினா ஜார்ஜ், பைஜு, ஹரிஸ்ரீ அசோகன், மம்முக்கோயா இசை – சுஷின் ஷ்யாம், ஷான் ரோல்டன் தயாரிப்பு –…

The post ’மின்னல் முரளி’ திரை விமர்சனம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சூப்பர் ஹீரோ சினிமா ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க வந்துள்ள படம் ‘மின்னல் முரளி’.

நடிப்பு – டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், பெமினா ஜார்ஜ், பைஜு, ஹரிஸ்ரீ அசோகன், மம்முக்கோயா
இசை – சுஷின் ஷ்யாம், ஷான் ரோல்டன்
தயாரிப்பு – வீக் என்ட் பிளாக்பஸ்டர்ஸ்
இயக்கம் – பேசில் ஜோசப்

கதை

கிராமத்தில் தந்தையின் தையல் கடையை நிர்வகித்து வரும் மகனான டொவினோ தாமஸ்னுக்கு தனது காதலியுடன் அமெரிக்காவில் போய் செட்டிலாகி விடவேண்டும் என்பதே லட்சியம். அதேபோல அந்த ஊரில், பல வருடங்களாக தான் தூரத்திலிருந்து நேசித்து வந்த பெண் ஊரை விட்டு ஓடிய சோகத்தில் அனைத்தையும் இழந்து டீக்கடையில் வேலை செய்யும் குரு சோமசுந்தரம். இருவருமே கிராம மக்களால் விரும்பப் படாத நபர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒரு பெரிய மின்னல் ஒன்று இருவரையும் தாக்கி விடுகிறது. ஆச்சரியமாக மறுநாள் காலையில் இருவரும் உடலில் எந்தக் காயங்களும் இன்றி உயிர் பிழைக்கின்றனர். இருவருக்குமே சூப்பர்மேன் சக்தியும் கிடைக்கிறது. அன்று முதல் இருவரது உடலிலும் சில மாற்றங்கள் தெரியத் தொடங்குகின்றன. இருவருமே தங்களுக்கு சூப்பர் பவர்கள் கிடைத்துள்ளதை தெரிந்து கொள்கின்றனர். இருவருமே முதலில் தங்கள் சக்திகளை அவரவர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர். பின்னர் இருவரது வாழ்க்கையிலும் ஏற்படும் தனிப்பட்ட இழப்பு ஒருவரை சூப்பர் வில்லனாகவும் மற்றொருவரை சூப்பர் ஹீரோவாகவும் மாற்றுகின்றன. அதன் பிறகு என்னவானது என்பதே ‘மின்னல் முரளி’ சொல்லும் திரைக்கதை.

இயக்குனர் பேசில் ஜோசப் தெளிவான திரைக்கதையுடன், சரியான லாஜிக்குடன் படத்தை அழகாக நகர்த்திச் சென்றுள்ளார். சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் அவர்களை அவரவர் பாதைகளை தேர்ந்தெடுக்க வைக்கிறது என்பதை பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்து விடுகிறார் இயக்குநர் பேசில் ஜோசப்.

மின்னல் முரளியாக நடித்துள்ள டொவினோ தாமஸ். ஒரு காதல் தோல்விக்கு சாதாரணமாக அலட்டிக்கொள்ளும் வாலிபனாக, சூப்பர் பவர் கிடைத்தும் கூட, அதை ஒரு பெரிய விஷயமாக கருதாத ஒரு மனிதனாக தனது கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தி போகிறார். தனக்கு சூப்பர் பவர் கிடைத்திருப்பதை அவர் படிப்படியாக உணர்ந்து கொள்ளும் காட்சிகள் எல்லாம் காமெடி மற்றும் கலக்கல் ரகம்.

படத்தில் ஹீரோவுக்கு சரிசமமான பாத்திரம் குரு சோமசுந்தரத்துக்கு. ‘சூப்பர் டீலக்ஸ்’. ‘ஜோக்கர்’ வரிசையில் பேர் சொல்லப் போகும் கதாபாத்திரம். விரக்தி, கோபம், அழுகை, கோர சிரிப்பு என காட்சிக்குக் காட்சி தெறிக்க விடுகிறார்.

படம் முழுவதும் 90-களில் நடப்பதால் அந்தக் காலகட்டத்தை சரியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் விலகாத திரைக்கதையின் நேர்த்தியும் அழகான ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலங்கள் . குறிப்பாக , ஆரம்பத்தில் வரும் நாடகக் காட்சி, குரு சோமசுந்தரத்தின் காதல் காட்சிகள், இறுதி சண்டைக் காட்சிகள் அனைத்தும் சமீர் எஸ்.தாகீரின் தரமான ஒளிப்பதிவால் மனதில் நிற்கிறது.

இந்த மின்னல் முரளி நிச்சயம் ஒரு சூப்பர் ஹீரோ தான்.

The post ’மின்னல் முரளி’ திரை விமர்சனம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
105
மாநாடு திரைவிமர்சனம் https://koodal.com/movies/reviews/2021/12/28/maanaadu-review/ Tue, 28 Dec 2021 18:50:05 +0000 https://koodal.com/?p=100 மாநாடு – இது வெங்கட் பிரபுவின் அரசியல். வெங்கட் பிரபு எழுதி இயக்கி, சுரேஷ் காமாட்சி தயாரித்த தமிழ்த் திரைப்படம் ‘மாநாடு’. இதில் சிலம்பரசன், எஸ். ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரா, கருணாகரன், பிரேம்ஜி அமரன்,…

The post மாநாடு திரைவிமர்சனம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மாநாடு – இது வெங்கட் பிரபுவின் அரசியல்.

வெங்கட் பிரபு எழுதி இயக்கி, சுரேஷ் காமாட்சி தயாரித்த தமிழ்த் திரைப்படம் ‘மாநாடு’. இதில் சிலம்பரசன், எஸ். ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இசை மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா , ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் படத்தொகுப்பை பிரவீன் கே.எல் செய்துள்ளார்.

நடிப்பு – சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு – வி.ஹவுஸ் புரொடக்ஷன்
இயக்கம் – வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் ‘டைம் லூப்’ என்ற புதிய கான்செப்டில் வந்திருக்கும் படம் மாநாடு.

டைம் லூப் என்பது என்ன?

டைம் லூப் என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சிக்கி அதை மீண்டும் மீண்டும் வாழுவது. ஒரே தருணத்தில் மீண்டும் மீண்டும் வாழும் ஒரு நபரின் வாழ்க்கை ஒரு டைம் லூப் உருவாக்குகிறது.

உலகளவில் டைம் லூப், டைம் மெஷின் அல்லது கால பயணம் சார்ந்த திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும், நம் நாட்டில் சற்று குறைவு தான். சமீப காலத்தில் தான் இது போன்ற சயின்ஸ் பிக்ஷன் படங்கள் இங்கே வந்து கொண்டிருக்கின்றன.

கதை

ஊட்டியில் நண்பனுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக துபாயில் இருந்து சிலம்பரசன் வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சூழ்ச்சி வலையில் மாட்டிக்கொள்கிறார். அதில் அவர் பலியாக, மீண்டும் அந்த நாள் முதலிலிருந்து தொடங்குகிறது. அந்த நாளில்தான் தமிழக முதல்வரும் சுட்டுக் கொல்கிறார்கள். எதற்காகச் சுடுகிறார்கள், யார் சுடுகிறார்கள், தனக்கு ஏன் நடந்ததே திரும்பத் திரும்ப நடக்கிறது என்பதை சிம்பு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை. நாயகன் வழியாக வில்லனுக்கும் டைம் லூப் விளைவு தொற்றிக்கொண்டு, இருவருக்குமான ஆடுபுலி ஆட்டமாக சுவாரஸ்யமான ட்ரீமென்ட்டை திரைக்கதைக்கு தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

பொதுவாக சிலம்பரசனின் படங்கள் என்றாலே ஹீரோயிச பஞ்ச் வசனங்கள், விரலை ஆட்டி பேசுவது, காதல், டூயட் என்பது போன்ற செயல்கள் அனைத்தும் இல்லாமல், ஒரு புதிய கதாபாத்திரத்தில் புதிய தோற்றத்தில் பிரஷ் ஆக நடித்திருக்கிறார் சிம்பு.

போலீஸ்காரராக வரும் எஸ்.ஜே.சூர்யா திரையில் தோன்றும் வரும் இடங்களிலெல்லாம் கைத்தட்டல்கள் பறக்கின்றன. சிம்புவுக்கு இணையாய்க் கொடிபிடித்து வெற்றிநடை போடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. ஒரு கட்டத்தில் படத்தின் ஹீரோ சிம்புவா அல்லது எஸ்.ஜே.சூர்யாவா என ஆச்சரியப்பட வைக்கிறார். அதிலும் ஜீப்பில் வரும் ஒரு காட்சியில் “தலைவரே…தலைவரே…தலைவரே…” எனப் பேசும் போது தியேட்டரே அதிர்கிறது.

நாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை, ஆனாலும் படம் முழுவதும் இவர் வருவது போன்ற காட்சியமைப்புகள். கொடுக்கப்பட்ட பணியை மட்டும் சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார்.

படத்தின் எடிட்டிங் மிக அருமையாக இருக்கிறது இத்திரைப்படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட் ஆக திரைப்படத்தின் எடிட்டிங் அமைந்துள்ளது. இத்திரைப்ப்டத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ள பிரவீனுக்கு இது 100வது திரைப்படமாகும் அதில் அவர் அசத்தியிருக்கிறார்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு கிளாஸ் ரகம்.

கடைசி காட்சிவரை களைகட்டுகிறது இந்த ‘மாநாடு’.

The post மாநாடு திரைவிமர்சனம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
100