சமையல் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/women/recipies/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Tue, 28 May 2024 10:50:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 சமையல் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/women/recipies/ 32 32 201197430 வெஜிடபிள் கட்லட்டை செய்வது எப்படி? https://koodal.com/women/2024/05/28/how-to-make-vegetable-cutlet/ Tue, 28 May 2024 10:50:14 +0000 https://koodal.com/?p=56692 மாலை நேரத்தில் நாம் ருசிக்க வெஜிடபிள் கட்லட்டை எப்படி தயார் செய்வது என்பது குறித்துப் பார்ப்போம். நாம் மாலை நேரத்தில், நாம் சுவைக்க ஏற்ற ஒரு ரெசிபி தான், வெஜிடபிள் கட்லட். இந்த வெஜிடபிள் கட்லட்டை தயார் செய்வது எப்படி என்பது…

The post வெஜிடபிள் கட்லட்டை செய்வது எப்படி? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மாலை நேரத்தில் நாம் ருசிக்க வெஜிடபிள் கட்லட்டை எப்படி தயார் செய்வது என்பது குறித்துப் பார்ப்போம்.

நாம் மாலை நேரத்தில், நாம் சுவைக்க ஏற்ற ஒரு ரெசிபி தான், வெஜிடபிள் கட்லட். இந்த வெஜிடபிள் கட்லட்டை தயார் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,

பல்லாரி வெங்காயம் – ஒன்று,

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,

நறுக்கிய பச்சை மிளகாய் – இரண்டு,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,

கேரட் – ஒன்று,

பீன்ஸ் – ஏழு,

பச்சை பட்டாணி – அரை கப்,

நீர் – தேவையான அளவு,

உப்பு – தேவையான அளவு,

மசித்த உருளைக்கிழங்கு – மூன்று,

கொத்தமல்லித்தழை – சிறிதளவு,

மைதா – அரை கப்

பிரட் கிரப்ஸ் – ஒரு கப்,

செய்முறை: ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும். ஒரு நறுக்கிய பல்லாரி வெங்காயத்தைப்போடவும். இதனை ஒரு நிமிடம் நன்கு வதக்கிக்கொள்ளவும். பின் அதன்மேல், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு வதக்கிக்கொள்ளவும். அதில் ஒரு முழு கேரட்டை நன்கு நறுக்கி, அதுனுள் சேர்த்துக் கொள்ளவும். ஏழு பீன்ஸை அதில் நறுக்கிப் போடவும். பின் அதன் மேல் அரை கப் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். இதை நன்கு கிளறிக்கொண்டு மூன்று நிமிடங்கள் வரை வேக வைக்கவும். அதனுடன், காய் வேகும் அளவிலான நீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாக அதில் தேவையான அளவு உப்பினைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் அதில் மசித்து வைக்கப்பட்ட 3 உருளைக் கிழங்கினை சேர்த்துக் கொள்ளவும். அதனைத்தொடர்ந்து அதனை நன்கு கிளறிக்கொள்ளவும். பின், ஒரு டம்ளரின் பின் பகுதியை வைத்து, பாத்திரத்தில் உள்ள பட்டாணியை நசுக்கி விடவும். இந்த கலவையில் நீர் அதிகமாக இருப்பதுபோல் உணர்ந்தீர்கள் என்றால் ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதன்மேல் கூடவே, கொத்தமல்லித்தழை, கால் டீஸ்பூன் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்கொண்டு நன்கு கிளறலாம்.

அதன்பின் அரை கப் மைதா மாவினை எடுத்துக்கொண்டு, அதில் நீர் சேர்த்துக் கொள்ளவும். அதேபோல், 1 கப் பிரட் கிரப்ஸ்(Bread Crumbs) எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது, மேலே தயார் செய்யப்பட்ட பட்டாணி, உருளைக்கிழங்கு கலந்த கலவையினை உருண்டையாகப் பிடித்து அதனை மைதா மாவு கரைசலில் தோய்த்துவிட்டு, பின் பிரட் கிரம்ப்ஸ் மீது உருட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது கட்லட் பொரிப்பதற்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டுவிட்டது. பின், அதனை நல்லெண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும். தற்போது மாலை நேரத்தில் ருசிக்க சுவையான வெஜிடபிள் கட்லட் தயார்.

The post வெஜிடபிள் கட்லட்டை செய்வது எப்படி? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56692
மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்! https://koodal.com/women/2023/06/12/soak-the-mango-in-water-for-an-hour-and-eat-it/ Mon, 12 Jun 2023 10:14:23 +0000 https://koodal.com/?p=31240 முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான பழங்களில் ஒன்றாகும். அவற்றின் கவர்ச்சியான வடிவம், இனிப்பான சுவை மற்றும் கடிக்கத்தூண்டும் சதை என மாம்பழங்கள் அதிகளவு மக்களால் விரும்பப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளது. ஒவ்வொரு பழம் சாப்பிடுவதற்கும் ஒரு…

The post மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான பழங்களில் ஒன்றாகும். அவற்றின் கவர்ச்சியான வடிவம், இனிப்பான சுவை மற்றும் கடிக்கத்தூண்டும் சதை என மாம்பழங்கள் அதிகளவு மக்களால் விரும்பப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளது. ஒவ்வொரு பழம் சாப்பிடுவதற்கும் ஒரு வழிமுறை உள்ளது. அந்த வகையில் மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊறவைக்க வேண்டியது அவசியம். ஆனால் இது ஏன் என்று பலரும் ஆச்சரியப்படலாம்.

இது வெறும் விருப்பம் அல்லது பாரம்பரியம் சார்ந்த விஷயமா அல்லது அதற்குப் பின்னால் ஏதாவது அறிவியல் காரணம் உள்ளதா? இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள மாம்பழங்களின் வேதியியலையும் தண்ணீருடனான அவற்றின் தொடர்புகளையும் நாம் ஆராய வேண்டும். அறிவியல் காரணம் மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன், குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்துகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்னவென்றால், இது உடலில் உருவாகும் அதிகப்படியான பைடிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. இது ஒரு இயற்கை மூலக்கூறாகும், இது பல்வேறு பழங்கள், காய்கறிகள் மற்றும் சில கொட்டைகள் மற்றும் அதிகப்படியான வெப்பத்தை உருவாக்குகிறது, இது உடலுக்கு நல்லதல்ல.

நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழங்களை உண்பதற்கு சில நிமிடங்கள் அல்லது மணிநேரம் தண்ணீரில் ஊறவைப்பது, தோல் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய சில சாறு மற்றும் சாறு எண்ணெயை அகற்ற உதவும், குறிப்பாக சென்சிட்டிவான சருமம் அல்லது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது மிகவும் அவசியமான செயல்முறையாகும். மாம்பழ சாற்றில் பாலிபினால்கள், டானின்கள் மற்றும் டெர்பென்ஸ்கள் எனப்படும் பொருட்களின் கலவை உள்ளது, இது அரிப்பு, சிவத்தல் மற்றும் சில சமயங்களில் கொப்புளங்களை கூட ஏற்படுத்தும். மாம்பழங்களை சிறிது நேரம் ஊறவைப்பதன் மூலம், நீர் இந்த எரிச்சலூட்டும் பொருட்களை நீர்த்துப்போகச் செய்து கரைத்து, பழத்தை கையாளவும் சாப்பிடவும் பாதுகாப்பானதாக ஆக்குகிறது.

மாம்பழங்களை ஊறவைப்பது அவற்றின் சுவை மற்றும் அமைப்பை மேம்படுத்தும், குறிப்பாக அவை முழுமையாக பழுத்திருக்கவில்லை என்றாலோ அல்லது நீண்ட நேரம் குளிரூட்டப்பட்டிருந்தாலோ இந்த முறை பயனுள்ளதாக இருக்கும். மாம்பழங்களில் இயற்கையான சர்க்கரைகள், கரிம அமிலங்கள் மற்றும் டெர்பென்ஸ் மற்றும் எஸ்டர்கள் போன்ற ஆவியாகும் கலவைகள் நிறைந்துள்ளன, அவை அவற்றின் வாசனை மற்றும் சுவைக்கு காரணமாகின்றன. இருப்பினும், மாம்பழங்கள் காற்று, வெப்பம் அல்லது குளிரில் இருக்கும் போது போது இந்த கலவைகள் ஆவியாகலாம் அல்லது சிதையலாம், இது சுவை மற்றும் நறுமணத்தை இழக்க வழிவகுக்கும். மாம்பழங்களை ஊறவைப்பதன் மூலம், நீர் அதன் இயற்கையான இனிப்பு மற்றும் நறுமணத்தை இழக்காமல், பழத்தை மீண்டும் நீரேற்றம் மற்றும் புத்துயிர் பெற உதவுகிறது.

மாம்பழங்களை ஊறவைக்க, ஒரு கிண்ணதில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அவற்றின் அளவு மற்றும் பழுத்த தன்மையைப் பொறுத்து 10-30 நிமிடங்கள் பழங்களை மூழ்க வைக்கவும். சிலர் தண்ணீரில் உப்பு, வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து ஊறவைக்கிறார்கள். ஊறவைத்த பிறகு, தண்ணீரை வடிகட்டி, மாம்பழங்களை ஒரு துண்டு அல்லது காகிதத்தால் உலர வைக்கவும். நீங்கள் விரும்பியபடி மாம்பழங்களை உரிக்கலாம், துண்டுகளாக்கலாம் அல்லது நறுக்கலாம் மற்றும் பல்வேறு சமையல் குறிப்புகளில் அவற்றை சிற்றுண்டி, இனிப்பு அல்லது மூலப்பொருளாக சேர்க்கலாம். எனவே அடுத்த முறை மாம்பழம் வாங்கும்போது அதனை ஊற வைத்து சாப்பிட மறந்து விடாதீர்கள்.

The post மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
31240
அகம் நோய் தீர்க்கும் அகத்தி கீரையின் அற்புத பலன்கள்! https://koodal.com/women/2023/06/12/amazing-benefits-of-agathi-keera-for-healing-internal-diseases/ Mon, 12 Jun 2023 10:12:48 +0000 https://koodal.com/?p=31237 அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் இதில் இருப்பதால், இதற்கு அகத்தி கீரை என்ற பெயர் வந்தாக கூறப்படுகிறது. வருடம் முழுவதும் சுலபமாக கிடைக்கக்கூடியது. மேலும் வெற்றிலைத் தோட்டத்திற்கு உறுதுணையாகவும், பொதுவாக வெற்றிலைத் தோட்டம் உள்ள பகுதியில் இந்த அகத்திக்கீரை ஏராளமாக…

The post அகம் நோய் தீர்க்கும் அகத்தி கீரையின் அற்புத பலன்கள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் இதில் இருப்பதால், இதற்கு அகத்தி கீரை என்ற பெயர் வந்தாக கூறப்படுகிறது. வருடம் முழுவதும் சுலபமாக கிடைக்கக்கூடியது. மேலும் வெற்றிலைத் தோட்டத்திற்கு உறுதுணையாகவும், பொதுவாக வெற்றிலைத் தோட்டம் உள்ள பகுதியில் இந்த அகத்திக்கீரை ஏராளமாக கிடைக்கும். முற்றின கீரையை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது, அவை ஒவ்வொமை மற்றும் வயிற்று பிரச்சனையை ஏற்படுத்திவிடும், இளங்கீரையை எடுத்து சமையலுக்கு பயன்படுத்தவேண்டும்.

இதில் 50 கும் மேற்பட்ட சத்துகள் உள்ளது. இரண்டு வகையான அகத்தி கீரை, ஒன்று வெள்ளை நிற பூக்கள் கொண்டது, மற்றொன்று சிவப்பு நிற பூக்கள் கொண்டது. இந்த மரத்தின் அனைத்து பகுதிகளும் மூலிகை தன்மை உள்ளது. பெரும்பாலும் வெள்ளை நிற பூக்கள் கொண்ட அகத்தி கீரையை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்கீரை சற்று கசப்பாக இருக்குமென்பதால், மற்ற கீரையை போல் விலை போவதில்லை. இந்த கசப்பு தன்மை தெரியாமல் இருக்க சமைக்கும்போது, தேங்காப்பால் சேர்த்து சமைத்தால், ருசியாக இருக்கும். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களும், உயிர்ச்சத்துக்களும் பற்றி தெரிந்துகொண்டால், உடலின் பல்வேறு ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு இதற்கு உண்டு. புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்துதல், குட்கா, புகையிலை போன்ற பழக்கத்தில் உள்ளவர்கள், அடிக்கடி உணவில் சேர்த்துவர, இப்பழக்கத்திலிருந்து விடுபடலாம். இக்கீரையில் வாயு தன்மை இருப்பதால், சமைக்கும்போது பெருங்காயம் சேர்த்து கொள்வது, முற்றிலும் வாயுவை வெளியேற்றிவிடும்.

கால்சியம் சத்தும் அதிகம் இருப்பதால் முக்கியமாக பற்கள், மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இக்கீரையை சமைத்து உண்டபின், செரிமானம் மெதுவாக இருக்கும், எனவே குழந்தைகள், பெரியவர்கள் மத்திய உணவில் மட்டும் சேர்த்துக்கொள்வது நல்லது. வாரத்தில் 2 முறை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், முதிர்வயதிலும் எலும்பு உறுதியாக இருக்கும். ர

தேமல், மற்றும் சொரியாசிஸ் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இக்கீரையை மைய அரைத்து, தேமல், சொரியாசிஸ் உள்ள இடத்தில் தடவி வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய வாய்ப்புண்டு. பித்தம், உடல் சூடு, மூளை சம்பந்தமான பகுதியில் கோளாறு ஏற்படுவதால், அறிவு ஆற்றல் மற்றும் நியாபக குறைவு ஏற்படும். இவற்றை சரிசெய்ய அடிக்கடி உணவில் சாப்பிட்டுவந்தால், இப்பிரச்சனையிலிருந்து பூரண குணமடையலாம். அகத்தி கீரையின் பூக்களை கண்களில் வைத்து சிறு துணி வைத்து கட்டிக்கொண்டால், கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கி, நல்ல தெளிவான பார்வை கிடைக்கும்.

The post அகம் நோய் தீர்க்கும் அகத்தி கீரையின் அற்புத பலன்கள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
31237
புதினா சப்பாத்தி https://koodal.com/women/2022/11/25/mint-chapati-cooking-recipes-in-tamil/ Fri, 25 Nov 2022 09:25:20 +0000 https://koodal.com/?p=17609 சப்பாத்தி செய்யும்போது அதில் ஏதாவது காய்கறி துருவல்கள் சேர்த்து செஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்கல.. அதுபோல் மருத்துவ தன்மைகொண்ட சுவையான உடலுக்கு பொலிவையும், சுறுசுறுப்பைத்தரும் புதினாவையும் சேர்த்து செஞ்சு கொடுத்துப் பாருங்க..சப்பாத்தி அபார சுவையுடன் இருக்கும்.. குழந்தைகளும் வெளுத்து வாங்குவாங்க..…

The post புதினா சப்பாத்தி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சப்பாத்தி செய்யும்போது அதில் ஏதாவது காய்கறி துருவல்கள் சேர்த்து செஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்கல.. அதுபோல் மருத்துவ தன்மைகொண்ட சுவையான உடலுக்கு பொலிவையும், சுறுசுறுப்பைத்தரும் புதினாவையும் சேர்த்து செஞ்சு கொடுத்துப் பாருங்க..சப்பாத்தி அபார சுவையுடன் இருக்கும்.. குழந்தைகளும் வெளுத்து வாங்குவாங்க..

தேவையான பொருட்கள்:

புதினா – ஒரு கட்டு
கோதுமை மாவு – ஒரு கப்
சோளமாவு – ஒரு பங்கு
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 10 பல்
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
தயிர் – 1/2 கப்
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீ ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

* இஞ்சி-பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும்.

* மாவுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

* சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி தேய்த்து சுட்டெடுக்கவும்.

The post புதினா சப்பாத்தி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
17609
பேரீச்சம்பழ பாயசம் https://koodal.com/women/2022/11/23/dates-payasam-cooking-recipes-in-tamil/ Wed, 23 Nov 2022 09:44:16 +0000 https://koodal.com/?p=17423 இயற்கையின் மூலமாக இறைவன் மனிதர்களுக்கு அளித்துள்ள இனிப்புகள் பலப்பல. இயற்கை இனிப்பின் இயல்பான சுவையுடன் ஆரோக்கிய சுவையும் சேர்ந்தது பேரீச்சம்பழம். இது உணவை செரிக்க உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்குகிறது. ஒரு பேரீச்சம் பழத்தில் 23…

The post பேரீச்சம்பழ பாயசம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இயற்கையின் மூலமாக இறைவன் மனிதர்களுக்கு அளித்துள்ள இனிப்புகள் பலப்பல. இயற்கை இனிப்பின் இயல்பான சுவையுடன் ஆரோக்கிய சுவையும் சேர்ந்தது பேரீச்சம்பழம். இது உணவை செரிக்க உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்குகிறது. ஒரு பேரீச்சம் பழத்தில் 23 கலோரிகள் உள்ளன என்பது வரப்பிரசாதம். நாவை இனிக்க வைக்கும் இனிப்புகளான பேரீச்சம் பழம் மற்றும் வெல்லத்துடன் தன் அதிவாசனையால் மனதை ஈர்க்கும் ஏலக்காய்த் தூள் சேர்த்து இனிக்க இனிக்க பேரீச்சம்பழ பாயசம் செய்யலாமா..

தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 1 கப்
தேங்காய்ப் பால் – 1 கப்
வெல்லம் நறுக்கியது – 1/4 கப்
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை
பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

* கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை பொடிப் பொடியாக அரிந்து கொண்டு தேங்காய்ப்பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

* வெல்லத்தை சிறிது தண்­ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும், ஒரு உலோக வடிகட்டியில் தூசி நீங்க வடிகட்டிக் கொள்ளவும்.

* ஒரு வாணலி அல்லது நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்ல நீரை சேர்த்து ஒரு கொதி விடவும்,

* ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு மத்தியில் வைத்து நன்கு நெரித்து கொதிக்கும் பாயசத்தில் போட்டு ஏலக்காய் பொடி தூவி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு:

* தேங்காய்த் துருவலை சிறிது சுடுநீருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து ஒரு உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி எடுத்து வடிகட்டிய முதல் தேங்காய்ப்பாலை உபயோகிக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட்டுகளில் ரெடியாகக் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் உபயோகிக்கலாம்.

* ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதானது வெல்ல சுவையைத் தூக்கிக் காட்டும். வெல்லத்திற்கு பதிலாக தேவைப்பட்டால் சிறிது தேனும் உபயோகிக்கலாம்.

* மற்ற பாயசங்களில் இருந்து வேறுபட்ட சுவையுடன் இயற்கை இனிப்புடனும் கமகம மணத்துடனும் இருக்கும் பேரீச்சம் பழ பாயசம் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது என்றால் சரிதானே!

The post பேரீச்சம்பழ பாயசம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
17423
தக்காளி அவல்! https://koodal.com/women/2022/11/14/tomato-rice-flakes-cooking-recipes-in-tamil/ Mon, 14 Nov 2022 10:43:22 +0000 https://koodal.com/?p=16696 சிறிது அவலை வெறும் வாயில் மென்றாலே அலாதி சுவைதான். அதையே இந்த மாதிரி வெரைட்டியா செஞ்சு சாப்பிட்டா அவல் பிடிக்காதவர்கள்கூட ஒரு பிடி பிடித்து விடுவார்கள்.. குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.. உடனே செஞ்சு கொடுத்து அசத்துங்க.. தேவையான பொருட்கள்: (2…

The post தக்காளி அவல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சிறிது அவலை வெறும் வாயில் மென்றாலே அலாதி சுவைதான். அதையே இந்த மாதிரி வெரைட்டியா செஞ்சு சாப்பிட்டா அவல் பிடிக்காதவர்கள்கூட ஒரு பிடி பிடித்து விடுவார்கள்.. குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.. உடனே செஞ்சு கொடுத்து அசத்துங்க..

தேவையான பொருட்கள்: (2 பேருக்கு)

அவல் – 1 கப்
தக்காளி – 1
பச்சைப் பட்டாணி – 1/2 கப் (வேகவைத்தது)
கேரட் – 1 சிறியது
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகாய் வத்தல் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
மஞ்சள் – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீ ஸ்பூன்
உளுத்தப்பருப்பு – 1 டீ ஸ்பூன்
கடுகு – 1 டீ ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 1 மூடி

செய்முறை:

* அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

* பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.

* பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.

* எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கடலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.

* பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். அதனுடன் பருப்பு, ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.

* சுவையான தக்காளி அவல் தயார்.

The post தக்காளி அவல்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
16696
பரங்கிக்காய் ஹோலன் https://koodal.com/women/2022/11/10/paranki-holen-cooking-recipes-in-tamil/ Thu, 10 Nov 2022 10:26:12 +0000 https://koodal.com/?p=16345 தேவையான பொருட்கள்: இளம் பரங்கிக் கீற்று – 1 பச்சைமிளகாய் – 6 தேங்காய் எண்ணெய் – 1/4 கப் கறிவேப்பிலை – சிறிது தேங்காய் துருவல் – 1 கப், உப்பு – தேவையான அளவு. செய்முறை:- பரங்கிக்காயை சற்றே…

The post பரங்கிக்காய் ஹோலன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தேவையான பொருட்கள்:

இளம் பரங்கிக் கீற்று – 1
பச்சைமிளகாய் – 6
தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் துருவல் – 1 கப்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:-

பரங்கிக்காயை சற்றே பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும் (அப்போதுதான் குழையாமல் இருக்கும்) பச்சை மிளகாயை நுனியில் மட்டும் சற்று கீறி வைத்துக் கொள்ளவும்.

காராமணியை லேசாக வறுத்து, பிறகு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பரங்கிக்காயுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தனியே வேகவிடவும், தேங்காயை மிகவும் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெந்து கொண்டிருக்கும் பரங்கிக்காயுடன் வேகவைத்து எடுத்த காராமணி, தேங்காய் விழுது சேர்த்து கலக்கவும். பிறகு கால் கப் தேங்காய் எண்ணெயை இதில் ஊற்றி, கறிவேப்பிலை சேர்க்கவும். இதை அதிக நேரம் கொதிக்கவிடக்கூடாது. தாளிக்கவும் வேண்டாம். கேரளத்து ஸ்பெஷலான இந்த ஹோலன், சாதத்துக்கு சூப்பர் ஜோடி.

The post பரங்கிக்காய் ஹோலன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
16345
மணத்தக்காளி சூப் https://koodal.com/women/2022/11/10/manathakkali-soup-cooking-recipes-in-tamil/ Thu, 10 Nov 2022 10:15:17 +0000 https://koodal.com/?p=16342 தேவையானவை: மணத்தக்காளி கீரை – அரை கட்டு சின்ன வெங்காயம் – 8 பூண்டு – 3 பல் தேங்காய்ப்பால் – ஒரு கப் உப்பு – சுவைக்கேற்ப மிளகுத்தூள் – சிறிதளவு எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: கீரையை…

The post மணத்தக்காளி சூப் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தேவையானவை:

மணத்தக்காளி கீரை – அரை கட்டு
சின்ன வெங்காயம் – 8
பூண்டு – 3 பல்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
உப்பு – சுவைக்கேற்ப
மிளகுத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி, பிறகு கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து, “வெயிட்”டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றிவிட்டு குக்கரை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள். வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப். (விருப்பப்பட்டவர்கள் வெங்காயம் வதக்கும்போது, ஒரு தக்காளி சேர்க்கலாம்).

The post மணத்தக்காளி சூப் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
16342
இறால் பக்கோடா https://koodal.com/women/2022/11/10/iral-pakora-prawn-pakoda-cooking-recipes-in-tamil/ Thu, 10 Nov 2022 10:05:51 +0000 https://koodal.com/?p=16339 தேவையான பொருட்கள்: இறால் மீன் (பெரியது) -1/2 கிலோ கடலை மாவு – ஒரு கப் பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன் எண்ணை – பொறிக்கத்தேவையான அளவு உப்பு – ருசிக்கேற்ப செய்முறை: முதலில் இறாலை நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்.…

The post இறால் பக்கோடா appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தேவையான பொருட்கள்:

இறால் மீன் (பெரியது) -1/2 கிலோ
கடலை மாவு – ஒரு கப்
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
எண்ணை – பொறிக்கத்தேவையான அளவு
உப்பு – ருசிக்கேற்ப

செய்முறை:

முதலில் இறாலை நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். கடலை மாவு பேக்கிங் பவுடர், உப்பு, மிளகாய்த் தூள் எல்லா வற்றையும் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். 5 நிமிடம் அப்படியே இருக்கட்டும். வாணலியில் எண்ணையை சூடாக்கி இறாலை மாவில் முக்கி எடுத்துப் போட்டு பொறிக்க வேண்டும். இறால், பக்கோடா மெத்தென்று பெரிய அளவில் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இறாலையும் மற்ற மசாலா பொருட்களையும் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து அப்படியே சூடான எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கலாம்.

The post இறால் பக்கோடா appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
16339
செம்பருத்தி ஜூஸ் https://koodal.com/women/2022/11/10/semparuthi-juice-hibiscus-juice-cooking-recipes-in-tamil/ Thu, 10 Nov 2022 09:53:48 +0000 https://koodal.com/?p=16335 தேவையான பொருட்கள்: செம்பருத்தி ஒற்றை இதழ் பூ – 5 தண்ணீர் – 2 கப் சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் ஐஸ்கட்டிகள் – தேவைக்கு செய்முறை:- செம்பருத்தியை இதழ்களாக ஆய்ந்து கழுவுங்கள். சர்க்கரையுடன் தண்ணீரைக் கொதிக்கவிடுங்கள். சர்க்கரை கரைந்ததும்…

The post செம்பருத்தி ஜூஸ் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தேவையான பொருட்கள்:

செம்பருத்தி ஒற்றை இதழ் பூ – 5
தண்ணீர் – 2 கப்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – தேவைக்கு

செய்முறை:-

செம்பருத்தியை இதழ்களாக ஆய்ந்து கழுவுங்கள். சர்க்கரையுடன் தண்ணீரைக் கொதிக்கவிடுங்கள். சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து, செம்பருத்தி இதழ்களை சேர்த்து மூடிவிடுங்கள். அரைமணி நேரம் கழித்து வடிகட்டி, ஆறியதும் ஐஸ்கட்டிகளைச் சேர்த்து ஜில்லெனப் பரிமாறுங்கள்.

The post செம்பருத்தி ஜூஸ் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
16335