பரங்கிக்காய் ஹோலன்

தேவையான பொருட்கள்:

இளம் பரங்கிக் கீற்று – 1
பச்சைமிளகாய் – 6
தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் துருவல் – 1 கப்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:-

பரங்கிக்காயை சற்றே பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும் (அப்போதுதான் குழையாமல் இருக்கும்) பச்சை மிளகாயை நுனியில் மட்டும் சற்று கீறி வைத்துக் கொள்ளவும்.

காராமணியை லேசாக வறுத்து, பிறகு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பரங்கிக்காயுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தனியே வேகவிடவும், தேங்காயை மிகவும் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெந்து கொண்டிருக்கும் பரங்கிக்காயுடன் வேகவைத்து எடுத்த காராமணி, தேங்காய் விழுது சேர்த்து கலக்கவும். பிறகு கால் கப் தேங்காய் எண்ணெயை இதில் ஊற்றி, கறிவேப்பிலை சேர்க்கவும். இதை அதிக நேரம் கொதிக்கவிடக்கூடாது. தாளிக்கவும் வேண்டாம். கேரளத்து ஸ்பெஷலான இந்த ஹோலன், சாதத்துக்கு சூப்பர் ஜோடி.