நன்றாக மேக்-அப் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், பலருக்கு எவ்வாறு அதை முறையாக செய்வது, மேக்-அப் வெகுநேரம் கலையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிவதில்லை. மேக்-அப் செய்து கொள்வது பற்றிய சில டிப்ஸ் இதோ உங்களுக்காக..
முகத்திற்கான மேக்-அப்:
முகத்தை பேஸ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். பின், கிளென்சர் பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து, முகத்தில், 10 முதல் 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இது முகத்தில், அதிகமாக வியர்ப்பதை குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்-அப் கலையாமல், பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.
மழைக்காலத்தில், மேக்-அப் செய்வதற்கு முன், பவுண்டேஷன் மற்றும் பேஸ் கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்தால், இவை அனைத்தும் கரைந்துவிடும். தேவைப்பட்டால், தண்ணீரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்தலாம். சிறிதளவு பவுடர் மட்டும் பூசலாம். ஐஷேடோவாக, பிங்க் கலர் கிரீமை பயன்படுத்தலாம். பின், கண் அலங்காரத்திற்கு, தண்ரில் கரையாத மஸ்காரா உபயோகிக்க வேண்டும்.
மழைக்காலத்தில், உதட்டை அலங்கரிக்க, மேட்டி லிப்ஸ்டிக் தான் சிறந்தது. லைட் ஷேட், லிப் லைனர்கள் மற்றும் லிப்ஸ்டிக்கள் பயன்படுத்தலாம். இந்த காலத்தில் மாய்சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இவை, தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றை தவிர்க்க உதவும்.
இயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில், அது இன்னும் அதிகமாக இருக்கும். அவ்வாறானவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டீஸ்பூன் பால் கிரீம் மற்றும் சில துளி பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் நன்கு ஊறிய பின், தண்ரால் கழுவ வேண்டும்.
கூந்தல் பராமரிப்பு:
மழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். கூந்தலில் ஏற்படும், அதிகப்படியான ஈரப்பதம், வியர்வை மற்றும் மழையில் நனைதல் போன்றவற்றால், அவை வலுவற்று காணப்படுகிறது. கூந்தல் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளுதல் மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவை மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள். இறுக்கமான பேன்டுகள், தலையை ப்ரீஹேர் விடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், காற்றில் உள்ள ஈரப்பதம், கூந்தலை வலுவிழக்க செய்வதோடு, கூந்தலில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மழைக்காலத்திற்கு, கூந்தலுக்கு அதிகமாக, ரசாயன சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மிதமான ஷாம்புகள் பயன்படுத்தி, குளிக்கலாம்.
மழைக்காலத்திற்கு ஏற்ற உடைகள்:
மழைக்காலத்தில், கிரிஸ்ப், காட்டன் மற்றும் பட்டு உடைகள் அணிவதை முடிந்த வரைத் தவிர்க்கவேண்டும். சிந்தடிக் உடைகளே ஏற்றது. இவை, விரைவாக உலர்வதோடு, காய்ந்த பின்னும், அதன் ஒரிஜினல் நிறம் அப்படியே நீடிக்கிறது. மழைக்காலத்தில், சாலைகளில் சேறு இருக்கும் என்பதால், வெள்ளை மற்றும் லைட் கலர் உடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும். நீலம், ரிச் கிரீன், அடர் ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் உடையணியலாம். மேக்-அப்பிற்கு ஏற்றவாறு, எடை குறைவான நகைகளை அணியலாம்.