உங்க செல்லத்த நாய் கடிச்சிருச்சா?

எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து. சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எளிதில் தடுக்கலாம்.

பூனை, குரங்கு, நரி, ஓநாய், வவ்வால் போன்றவை மூலமும் ரேபிஸ் பரவும்.

ரேபிஸ் உடலில் பரவி நரம்பு மண்டலத்தை தாக்கினால் அதன் பிறகு செய்வதற்கு ஒன்றுமில்லை. மரணம் நிச்சயம். வெறிநாயின் எச்சிலிலும் ரேபிஸ் கிருமிகள் உண்டு. எனவே ஏற்கனவே காயம் இருந்து அதை நாய் நக்கினாலும் ரேபிஸ் பரவும்.

உணவு கட்டுப்பாடு ஏதும் கிடையாது.

முதலுதவி:

நல்லா சோப் போட்டு கழுவ வேண்டும். இது ரொம்ப முக்கியம். கடித்த இடத்தில் ரேபிஸ் கிருமிகள் கோடிக்கணக்கில் இருக்கும். குறைந்தது 2 நிமிடங்கள் ஓடும் டேப் தண்ணீரில் கழுவவேண்டும். அதன் பின் ஆன்டிசெப்டிக் லோஷன் போட்டு கழுவலாம்.

கடி வாயை மூடக்கூடாது; தையல் போடக்கூடாது.

உடனே முதல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

கடியின் வகைகள்:

நாயை தொடுதல், உணவு ஊட்டுதல், காயம் படாத தோலை நக்குதல்.

மருத்துவம்: தேவையில்லை

சிராய்ப்பு காயம், கவ்வுதல், குறைவான அளவில் ரத்தக்கசிவு

மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி மற்றும் ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி

ஏற்கனவே உள்ள காயத்தை நக்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட ஆழமான காயங்கள், நரி, ஓநாய், வவ்வால் கடி

மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி மற்றும் ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி மற்றும் இம்முயுனோக்லோபின் தடுப்பு மருந்து.

ஊசிகள்:

1. டிடி ஊசி – இது எந்த விலங்கு கடித்தாலும் போடவேண்டியது.

2. ரேபிஸ் ஊசி – அரசு மருத்துவமனையில் இது இலவசமாக போடப்படும். தனியாரில் ரூ 350-500 வரை ஆகும்.

3. இம்யுனொக்லொபின் – அதிகமான அளவில் உள்ள காயத்திற்கு கட்டாயம் போட வேண்டும். இதுவும் இலவசமாக கிடைக்கும்.