தேவையான பொருட்கள்:
நண்டு – 6
பூண்டு – 2 (பெரிது)
மிளகு – 3 டீஸ்பூன்
கசகசா – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் – 1/2 மூடி
சாம்பார் வெங்காயம் – 5
பச்சை மிளகாய்/காய்ந்த மிளகாய் – 100 கிராம்
சோம்பு – 3 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 150 கிராம்
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது அளவு எண்ணெய் ஊற்றி துருவிய தேங்காய், கசகசா, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த மசாலாவுடன் பூண்டு, மஞ்சள் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதில் சுத்தம் செய்த நண்டுகளை சேர்த்து, அவை நிறம் மாறும் வரை வதக்கவும். அரைத்த மசாலாவை இத்துடன் சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும். நண்டு வறுவல் ரெடி.