வட இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மதிப்பெண்கள் சான்றிதழ்கள் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றது போலி சான்றிதழ் தயாரித்து மோசடி நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியாவில் உள்ள தபால் அலுவலகங்களில் சேர 500 போலி தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ்கள் தந்துள்ளனர். போலி மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டதை தமிழக அரசின் தேர்வுகள் துறை கண்டுபிடித்துள்ளது. இதுவரை ஆய்வு செய்த 2,500 மதிப்பெண் சான்றிதழ்களில் சுமார் 1000 சான்றிதழ்கள் போலியானவை. இதே போல் போலி மதிப்பெண் சான்று தந்து 300 பேர் தமிழக தபால் அலுவலகங்களில் பணியாற்றி வருவதும் உறுதியாகியுள்ளது. பெரும்பாலான மதிப்பெண்கள் சான்றிதழ்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அச்சப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தி முதன்மை மொழியாக அச்சடிக்கப்பட்டு பெரும்பாலான சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.