கள்ளக்குறிச்சி கலவரம்: அப்பாவி இளைஞர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன்

கள்ளக்குறிச்சியில் மர்மமான உயிரிழந்த மாணவியின் விலா எலும்புகள் உடைந்தும், மார்பகத்தில் பல்லால் கடிபட்ட காயங்கள் இருப்பதையும் ஏன் போஸ்ட்மாட ரிப்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி விடுவதும் அடித்து சசூரையாடப்பட்டது. மேலும், பள்ளி வகுப்பறையில் இருந்த பாட புத்தகங்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்த சான்றிதழ்கள் உள்ளிட்ட கோப்புகள், பள்ளி வாகனங்கள், தளவாடப் பொருள்கள் என அனைத்தும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை காவல் துறையினரால் 320க்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறியும், பட்டதாரி இளைஞர்கள் பலர் மீதும் காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியும் மாணவி உயிரிழப்பிற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு கை கால் போன்ற உறுப்புகள் உடைந்து இருக்க வேண்டும். ஆனால் உடலின் பாதுகாப்பான பகுதியான விழா எலும்புகள் 14 உடைந்திருப்பது ஏன்? விலா எலும்புகள் உடலின் பாதுகாப்பான பகுதி பலத்த தாக்குதலுக்கு உட்பட்டால் மட்டுமே விலா எலும்புகள் உடையும்.

சமூக ஊடகங்களில் மாணவி அழைத்து செல்லும் காட்சிகள், விடுதி மாடிக்கு செல்லும் காட்சிகள், ஏன் இறந்த பிறகு அவரை தூக்கி செல்லும் காட்சிகள் அனைத்து காட்சிகளும் வெளியாகும் பொழுது ஏன் அவர் மாடியில் இருந்து விழுந்த காட்சிகள் வெளியாகவில்லை. அந்த பெண்ணை தூக்கி செல்கின்ற பொழுது மனிதநேயமற்ற வகையில் பன்றி, நாய்களை தூக்கிச் செல்வது போல் தலை தொங்கியவாறு நான்கு பேர் தூக்கி செல்வது ஏன். உயிரிழந்த மாணவியின் சடலத்தை கொண்டு செல்கின்ற வாகனத்தைப் பற்றி ஏன் காட்சி வெளியாகவில்லை.

சம்பவம் நடந்த அன்று பள்ளியில் இருந்த விடுதிக்காப்பாளர் பள்ளி காப்பாளர் வாட்ச்மேன் மற்றும் பள்ளி தாளாளர் ஆகியோர்களை முழுமையாக விசாரிக்காதது ஏன். அதேபோல் மாணவியின் விலா எலும்புகள் உடைந்தும் மார்பகத்தில் பல்லால் கடிபட்ட காயங்கள் இருப்பதையும் ஏன் போஸ்ட் மாட ரிப்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை. இதை குறிப்பிடாத மருத்துவர்கள் மீது ஏன் விசாரணை நடைபெறவில்லை. பள்ளியில் ஏற்பட்ட பொருட்களுக்கு காப்பீட்டுத் தொகை பெற்று புதிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் உயிரிழந்த மாணவியின் உயிரை திரும்ப பெற முடியுமா?

பள்ளி நிர்வாகிகள் மற்றும் அவர்களது மகன்கள் பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்கள். சம்பவம் நடந்த தினத்திற்கு முதல் நாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவிற்கு தாளாளரின் மகன்களுடைய நண்பர்களும் வந்துள்ளனர். அவர்களை ஏன் முழுமையாக காவல்துறையினர் விசாரிக்கவில்லை. உயிரிழப்பு சம்பவம் கொலையாக இருந்தாலும் அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டிருந்தாலும் அதற்கு காரணமானவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதோடு வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி இளைஞர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.