உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டு விட்டதாக கூறி மாநில சட்ட பேரவை நோக்கி சமாஜ்வாதி கட்சி பிரமாண்ட பேரணியை மேற்கொண்டது.
உ.பி.யில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து விட்டதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதாவ் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார். இந்நிலையில், நேற்று உ.பி. சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி பேரவை நோக்கி சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திலிருந்து அகிலேஷ் யாதவ் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணி குறித்து உ.பி. துணை முதல்வர் மௌரியா கூறுகையில், சமாஜ்வாதி போராட்டத்திற்கும் மக்களின் நலனுக்கும் தொடர்பில்லை. பிரச்னையை பற்றி விவாதிக்க வேண்டுமானால், சட்டப்பேரவையில் அதைச் செய்யலாம். எங்கள் அரசு விவாதத்திற்கு தயாராக உள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் மக்களுக்கு பிரச்னைகளையே உருவாக்கும் என்றார்.