மதுரையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு!

கோவை, ஈரோட்டைத் தொடர்ந்து மதுரையிலும் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கோவையில் பெட்ரோல் குண்டு முதல் முதலாக சித்தாபுதூரில் உள்ள மாநகர பாஜக அலுவலகம் மீது வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிக்கவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து கோவையின் பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மதுரையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் அனுமந்தையர் மகன் கிருஷ்ணன் (வயது 55). இவர் கம்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு தொழில் செய்து வருகிறார் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அனுப்பானடி மண்டல் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இரவு 7.40 மணியளவில் 2 பேர் கொண்ட கும்பல் டூ வீலரில் வந்து 3 பெட்ரோல் குண்டுகளை கார் ஷெட்டில் வீசியதில் சரக்கு வாகத்தின் மேல் விழுந்து ஒன்றும். மற்றென்று வெளியே விழுந்து வெடித்தது. இதில் வெடிக்காக மற்றொரு பெட்ரோல் குண்டு ஒன்று கார்ஷெட்டின் உள்ளே விழுந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை ஆணையர் சீனிவாச பெருமால் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு அருகில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் இன்று இரவு வீட்டு முன்பு வந்த மர்மநபர் வீட்டு உள்ளே பெட்ரோல் குண்டு வீசினார். அதன்பிறகு அந்த வழியாக வந்தவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி பெட்ரோல் குண்டு வீசிய நபர் அங்கிருந்து செல்கிறார். இதுதொடர்பாக கீரைத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.