புதிய இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை: பாஜக

புதிய இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் கூறியதாவது:-

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகள் வேரறுக்கப்படுகின்றன. இதுதான் புதிய இந்தியா. இங்கு பயங்கரவாதத்திற்கு இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இது புதிய இந்தியா. இங்கு பயங்கரவாதத்திற்கும் குற்றவாளிகளுக்கும் அவற்றிற்கு துணைபோகும் அமைப்புகளுக்கும் இடமில்லை. அவர்களால் நாட்டின் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.