பாஜக தலைவர் அண்ணாமலை நாளை அமெரிக்காவிற்கு பயணம்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2 வார பயணமாக அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசியலில் பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் பிசியாக இருக்கிறார். ஆளும் திமுக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகள், போராட்டங்கள், பேரணிகள் என்று இவர் பிசியாக இருந்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கோவையில் அண்ணாமலை தலைமையில் பாஜக சார்பாக போராட்டங்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில்தான் திடீரென அண்ணாமலை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை அவர் சென்னையில் இருந்து அமெரிக்கா செல்ல உள்ளார்.

இரண்டு வார பயணமாக அண்ணாமலை அமெரிக்கா செல்கிறார். அங்கு தமிழர்களை அவர் சந்திப்பார். அதேபோல் அவர்களின் பிரச்சனைகள், இந்திய அரசு செய்ய வேண்டிய உதவிகள், விசா விவகாரம் என்று பல விஷயங்களை அவர் பேசுவார் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு செய்ய வேண்டிய தூதரக ரீதியான உதவிகள் தொடர்பாக அவர் பேசுவார் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 12ஆம் தேதி அண்ணாமலை மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவார்.