ஜம்மு – காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்ததாக கூறிய புகார் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஜம்மு – காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்ததாக கூறிய புகார் தொடர்பாக நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலமாக இருந்த போது, அதன் கவர்னராக 2018-19ல் இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஜம்மு – காஷ்மீர் கவர்னராக நான் இருந்த போது, காஷ்மீரில் நீர்மின் நிலைய திட்டம் உட்பட இரண்டு திட்டங்களுக்கான கோப்புகளில் அனுமதி அளித்து கையெழுத்து போட, எனக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்க, இரண்டு பேர் முன் வந்தனர். ஆனால், அந்த திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்ததும், இரு திட்டங்களையும் ரத்து செய்தேன்’ என கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது.சத்யபால் மாலிக் கூறிய லஞ்ச புகார் குறித்த விசாரணையில் முறைகேடு நடந்துள்ளதும், சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக சத்யபால் மாலிக்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.