நிலவில் ஏராளமாக சோடியம் குவிந்து கிடப்பதை சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள ‘கிளாஸ்’ என்று அழைக்கப்படுகிற அதிநவீன ‘எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர்’ கருவி வரைபடமாக்கி அனுப்பி உள்ளது என்ற தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘இஸ்ரோ’ தெரிவித்துள்ளது.
சந்திரன் என்று சொல்லப்படக்கூடிய நிலவை ஆராய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை விண்வெளியில் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. செயல்படும் ஆர்பிட்டர் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் என்னும் 3 பகுதிகளை கொண்டதுதான் இந்த விண்கலம். நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக விக்ரம் லேண்டரை மெல்ல மெல்ல தரையிறக்கும் முயற்சி எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. ஆனால் சந்திரயான்-2 ஆர்பிட்டர் இயல்பாக செயல்பட்டு வருகிறது. அதன் கருவிகள் செயல்படுகின்றன. நிலவு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தொடர்பாக புதிய தகவல்களை சேகரித்து அளிக்கின்றன.
அந்த வகையில் இப்போது முதன் முதலாக நிலவில் ஏராளமாக சோடியம் குவிந்து கிடப்பதை சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள ‘கிளாஸ்’ என்று அழைக்கப்படுகிற அதிநவீன ‘எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர்’ கருவி வரைபடமாக்கி அனுப்பி உள்ளது என்ற தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘இஸ்ரோ’ தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள், ‘தி ஆஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ்’ சில் இடம் பெற்றுள்ளன. இந்த ‘கிளாஸ் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர்’ பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில கட்டமைக்கப்பட்டதாகும். தற்போது ‘கிளாஸ் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர்’ தனது அதிக உணர்திறன் மற்றும் செயல்திறன் கொண்டுதான் நிலவில் சோடியம் குவிந்து கிடப்பதை வரைபடமாக்கி அனுப்பி இருக்கிறது என்ற தகவலை நமக்கு தருகிறது ‘இஸ்ரோ’.
நிலவில் சோடியம் குவிந்து கிடப்பதை சந்திரயான்-2 ஆர்பிட்டரின் ‘கிளாஸ் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் கிளாஸ்’ வரைபடம் ஆக்கி இருப்பது, நிலவின் மேற்பரப்பு-வெளிக்கோளம் தொடர்புகளை ஆராய்ச்சி செய்வதற்கு வழிகாட்டி உள்ளது, இது நமது சூரிய குடும்பத்திலும், அதற்கு அப்பாலும் புதன் மற்றும் பிற காற்றற்ற உடல்களைப் போன்ற மாதிரிகளை உருவாக்க உதவும் என்கிறது இஸ்ரோ. ஆக நிலவைப்பற்றி இன்னும் சுவாரசிய தகவல்கள் காத்திருக்கின்றன.