இங்கிலாந்து நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார்.
பிரிட்டன் புதிய பிரதமராக உள்ள லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்த கட்சி எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர். இது பிரதமர் லிஸ் டிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது அமைச்சரவையில் இருந்து நிதி அமைச்சர் குவாஸி குவார்டங்கை பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடியாக நீக்கியதாகவும், புதிய நிதி அமைச்சராக ஜெர்மி ஹன்ட் என்பவரை நியமித்து செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.