உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டி உள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் பிரசார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து அதிபர் ஜோ பைடன் பேசியதாவது:-
சீன அதிபர் ஷி ஜின்பிங், தான் விரும்புவதை புரிந்து கொண்டவர். ஆனால், மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன. ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதை ஒப்பிடும் போது, அதை எவ்வாறு கையாள்வது. எனது எண்ணப்படி, உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதம் வைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.