மியான்மர் நாட்டில் சிறைச்சாலையில் வெடிகுண்டு வெடித்தததில் 8 கைதிகள் பலியாகினர்.
மியான்மரில், ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் யாங்கோன் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நேற்று கண்காணிப்பு அலுவலகம் முன் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 வயது சிறுமி, பார்வையாளர்கள், சிறைக் காவலர்கள் என மொத்தம் 8 பேர் பலியானதோடு 18 பேர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு அரசுக்கு எதிராக செயல்படும் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.