தேவையான பொருள்கள்:
கடலை மாவு – 3 கப்
அரிசி மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 5 டீ ஸ்பூன் (அ) தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
சோடா மாவு – சிட்டிகை அளவு
எண்ணை பொரித்தெடுக்க
முறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு
செய்முறை:
* கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
* தேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.
* காய்ந்த எண்ணை ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும்.
* (கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமயம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)
* கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணையில் பிழிந்து பொரிக்கவும்.