பெரிய தாடியுடன் பெரிய பொறுப்பும் வருகிறது: விக்ரம்

நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘பெரிய தாடியுடன் பெரிய பொறுப்பும் வருகிறது. தங்கலான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விக்ரம் ஆண்டுகளை கடந்து தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். முன்னதாக சில படங்களில் நடித்திருந்தாலும் சேது படத்தின்மூலம் துவங்கிய விக்ரமின் சிறப்பான திரைப்பயணம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. 56 வயதை கடந்த நிலையிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டுள்ள விக்ரம் இளம் ஹீரோக்களுக்கே டப் கொடுத்து வருகிறார். கோப்ரா, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம். இந்தப் படங்களில் கோப்ரா கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் படத்தில் விக்ரமின் நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தையடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார் விக்ரம். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் விக்ரம்.

இதனிடையே டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளை பதிவிட்டு வருகிறார் விக்ரம். பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷனின்போதும் இவர் வெளியிட்ட அடுத்தடுத்த பதிவுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் தற்போது தன்னுடைய புதிய கெட்டப்பை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார் விக்ரம். நீண்ட தாடியுடன் தங்கலான் படத்தில் நடித்துவரும் கெட்டப்பின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட தாடி, பின்பக்கமாக கட்டப்பட்ட முடி என வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் இந்தப் புகைப்படங்களில் காணப்படுகிறார். மேலும் இந்த நீண்ட தாடி சிறப்பான பொறுப்புணர்வை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.