மாமன்னனில் தனுஷ் பாணியில் கையில் வாளேந்திய உதயநிதி!

கர்ணன் படத்தில் தனுஷ் கத்தி உடன் நிற்பது போலவே உதயநிதியும் நிற்பது போன்ற காட்சிகள் இந்த க்ளிம்ஸில் இடம்பெற்றுள்ளன.

நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டு இயங்கி வரும் உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தின் க்ளிம்ஸ் காட்சி தற்போது பிறந்தநாள் பரிசாக வெளியாகி உள்ளது. அதில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த வீடியோவை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நேற்று காலை முதலே உதயநிதி ஸ்டாலினுக்கு ஏகப்பட்ட அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து சொன்ன நிலையில் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். கர்ணன் மாதிரியே பரியேறும் பெருமாள் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ். மாமன்னன் படமும் டோட்டலாக வேற ஜானர் படம் எனக் கூறப்பட்டது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகி உள்ள இந்த படத்தில் கர்ணன் படத்தில் தனுஷ் கத்தி உடன் நிற்பது போலவே உதயநிதியும் நிற்பது போன்ற காட்சிகள் இந்த க்ளிம்ஸில் இடம்பெற்றுள்ளன

அந்த வீடியோவில் பேசியுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் இருவருடனும் இணையும் முதல் படம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாரி செல்வராஜ் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவருடைய கருத்து சிந்தனையே வித்தியாசமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். அத்துடன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் நீடூடி வாழ வேண்டும் என்று ஏஆர் ரகுமான் அந்த வீடியோவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனுஷின் ‘கர்ணன்’ பட பாணியில் உதயநிதி ஸ்டாலின் கையில் வாளேந்தியுள்ள ‘மாமன்னன்’ கிளிம்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.