ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு!

ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு! இந்த வரி உயர்வு சிறு குறு தொழில் துறையில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தும் எனவே இதனை திரும்பப் பெற வேண்டும் என அனைத்து மாநில நிதியமைச்சர் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்.

லக்னோவில் செப்டம்பர் 17ஆம் தேதி மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் காலணிகள் மற்றும் ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரியை மறு சீரமைப்புச் செய்து 5% இருந்து 12% உயர்த்தப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு தொழிற்சங்கங்கள் மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தின.

இதன் மூலம் இப்புதிய ஜிஎஸ்டி வரி வருகிற 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுவதால், ஜிஎஸ்டியை 5% லிருந்து 12% ஆக உயர்த்துவது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வீரர்களை மறைமுகமாக நுகர்வோர் மீது சுமத்தத் தூண்டும். புதிய ஆடை மற்றும் காலணிகள் வாங்குவோர் ஜிஎஸ்டி வரி உயர்வின் காரணமாக அதிகப்படியான தொகையைச் செலுத்த வேண்டி நிலை உருவாக உள்ளது. இதனால் கைத்தறி சங்கங்கள், நெசவாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என்று ஜவுளி துறையில் இருந்திடும் அனைவரையும் இந்த அறிவிப்பு கலக்கமடைய செய்திருக்கிறது.