உக்ரைன் நாட்டு தூதரகங்களுக்கு கொரியரில் ரத்த பார்சல்கள்!

உக்ரைன் நாட்டு தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையே பல மாதங்களாக போர் நடந்து கொண்டே வருகிறது. இரு தரப்பிலுமே போரை நிறுத்துவது போல தெரியவில்லை. இரு தரப்பு ராணுவ வீரர்களுமே ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இன்னமும் உயிரிழந்தும் வருகின்றனர். இதில், உக்ரைன் நாட்டு மக்கள் கதிகலங்கி போய்விட்டார்கள். உயிரை கையில் பிடித்துக் கொண்டு, அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும், உக்ரைன் நாட்டில் ஏகப்பட்ட உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை உலக நாடுகளால் மறக்க முடியாது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல உக்ரைன் நாட்டின் தூதரகங்களுக்கும், அலுவலகங்களுக்கும் பார்சல்கள் வந்துள்ளன. அந்த பார்சல்கள் எல்லாமே ரத்த பார்சல்கள். விலங்குகளின் கண்கள் அந்த பார்சலில் இருந்துள்ளன. மாட்ரிட்டில் தூதரகத்திற்கு நேற்றுகூட, விலங்குகளின் கண்கள் அடங்கிய ஒரு பார்சல் கிடைத்தது. பொதுவாக, இப்படியான பார்சல்களில் வெடிபொருட்களை வைத்து விஷமிகள் அனுப்புவார்கள். ஆனால், விலங்குகளின் கண்கள் பார்சலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. யார் இந்த காரியத்தை செய்தது என தெரியவில்லை. ரத்தப் பார்சல்கள் ரத்த பார்சல்களை பார்த்துமே அங்கிருந்தோர் அலறிப்போய்விட்டனர். இதெல்லாம் நிச்சயம் ரஷ்ய ராணுவ வீரர்கள் வேலையாகத்தான் இருக்கும் என்கிறார்கள். அவர்கள்தான் இப்படிப்பட்ட பார்சலை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. எனினும், மோப்ப நாய்கள் கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான உண்மைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதால் அந்த விசாரணையும் நடக்கிறது.

ரத்த பார்சல் இது தொடர்பாக உக்ரைன் செய்தித்தொடர்பாளர் சொல்லும்போது, “விலங்குகளின் கண்கள் அடங்கிய ரத்த பார்சல்கள் ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைத்து தூதரகங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ரத்த பார்சல்களால் உக்ரேனில் மறுபடியும் பதற்றமும், பரபரப்பும் சூழ்ந்து வருகிறது. இந்த ரத்த பார்சல்களை அனுப்பியவர்கள் குறித்து ஸ்பெயின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.